எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து பல அதிரடியான மாற்றங்கள் இருந்து வருகின்றது. ஒரு கட்டத்தில் ட்விட்டரின் எதிர்காலம் இனி என்னவாகுமோ? என்ற கேள்வியும் எழுந்தது.
எலான் மஸ்க் வாங்கியதில் இருந்த பல அதிரடி மாற்றங்களை செய்து வரும் எலான் மஸ்க், அவ்வப்போது சில குறும்புத்தனமான பதிவுகளையும் போட்டு வருகின்றார்.
அப்படி போட்ட ஒரு பதிவு தான் ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து தொடரலாமா? வேண்டாமா? என்பது குறித்தான கருத்து கணிப்பு. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் இதனை தொடங்கிய 4 மணி நேரத்தில் 90 லட்சம் பேர் தங்களது பதிவினை பதிவிட்டிருந்தனர்.
எலான் மஸ்கிற்கு எதிராக பதில்
இந்த பதிவில் 57% பேர் எலான் மஸ்க் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஏற்கனவே ஒருவரை பதவிக்கு தேர்வு செய்து விட்டு தான் இந்த கருத்து கணிப்பினை நடத்துகிறாரோ என்பது போல் தெரிகிறது எனவும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.
விரைவில் விலகுவேன்
இந்த கருத்து கணிப்பினை அடுத்து தற்போது எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விரைவில் விலகுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்கின் நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், இந்த கணிப்பானது வந்துள்ளது.
ட்விட்டரில் தான் உறக்கம்
முன்னதாக ட்விட்டர் நிறுவனத்தில் செய்ய வேண்டிய அனைத்து மறுசீரமைப்பபுகளையும் செய்து விட்டு, ட்விட்டரை விட்டு விலகுவேன். அதுவரையில் ட்விட்டரில் தான் எனக்கு உறக்கம் என்றும் கூறியிருந்தார். அதனை செய்து காட்டும் வகையில் ட்விட்டரின் தலைமையகத்தில் தான் உறங்கி வருகின்றார்.
கிறுக்குத்தனமான அறிவிப்புகள்
ஆரம்பத்தில் ட்விட்டரை கையகப்படுத்திய கையோடு ட்விட்டரில் பல கிறுக்குதனமான நடவடிக்கைகள் இருக்கும். அவை சரி வந்தால் அப்படியே விட்டுவிடுவோம். இல்லையெனில் அதனை விரைவில் மாற்றுவோம் என கூறியிருந்தார். அவர் கூறியதை போலவே அவ்வப்போது ஒவ்வொரு அறிவிப்பாக வெளி வந்த வண்ணமே உள்ளது. அப்படி கிறுக்குத்தனமான அறிவிப்பினை கொடுத்த நிலையில், தற்போது சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.
வாடகை கொடுக்கலையா?
சமீபத்தில் ட்விட்டரின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் பல பகுதிகளில் உள்ள அலுவலகங்களுக்கு வாடகை கொடுக்கப்படவில்லை என கூறப்பட்டது. இது குறித்து வாடகை பணம் கொடுக்க வேண்டாம் என ட்விட்டர் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. இது ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு, எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. அதனை தவிர்க்கவே இத்தகைய செயல்களில் எலான் ஈடுபட்டிருக்கலாம் என்ற குற்றசாட்டும் இருந்து வருகின்றது. மொத்தத்தில் ஒவ்வொரு நிமிடமும் என்ன செய்ய காத்திருக்கிறாரே என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
நிதி சந்தையிலும் தாக்கம் இருக்கலாம்
சமீபத்திய காலமாகவே கிரிப்டோகரன்சிகளில் நிலவி வரும் பதற்றத்தினை, முதலீட்டாளார்கள் அதனை உணரத் தொடங்கிவிட்டனர். சமீப காலமாகவே பெரியளவில் ஏற்றம் காணாத நிலையில், கிரிப்டோகரன்சிகள் மீதான முதலீடுகள் வெளியேறலாம். அதோடு எஃப்டிஎக்ஸ் போன்ற சம்பவங்களும் அரங்கேறலாம். இதுவும் கிரிப்டோகரன்சி சந்தையில் மட்டும் அல்ல, நிதி சந்தையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications