உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியவுடன் அதன் முக்கிய நிர்வாகிகளை வீட்டுக்கு அனுப்பியதோடு, பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.
குறிப்பாக ட்விட்டர் பயனாளிகளில் புளூடிக் வைத்திருப்பவர்கள் மாத கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
ட்விட்டர் நிறுவனம்
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான டெஸ்லா கார் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் அவர்கள் சமீபத்தில் 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றினார் என்பதை பார்த்தோம். ட்விட்டர் நிறுவனத்தை அவர் வாங்கிய அடுத்த நிமிடமே அவர் செய்த முதல் வேலை அந்நிறுவனத்தில் பணியாற்றிய சி.இ.ஓ உள்பட முக்கிய நிர்வாகிகளை வீட்டுக்கு அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
போலி கணக்குகள்
இதனை அடுத்து ட்விட்டர் சமூக வலைதளத்தை மிகவும் சிறப்பாக கொண்டு வர பல்வேறு அதிரடி நடவடிக்கை கொண்டு வரப் போகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக ட்விட்டரில் பல போலி கணக்குகள் இருப்பதால் அந்த கணக்குகளை டெலிட் செய்யும் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
புளூடிக்
இந்த நிலையில் அடுத்த கட்டமாக ட்விட்டரில் புளூடிக் வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்பட்டது. ட்விட்டரில் புளூடிக் வைத்திருப்பவர்கள் மாதம் 20 டாலர் கட்டணம் கட்டவேண்டும் என ஊடகங்களில் செய்திகள் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எழுத்தாளரின் எதிர்ப்பு
இதனை அடுத்து அமெரிக்க பிரபல எழுத்தாளர் ஸ்டீபன் கிங் என்பவர் தனது அதிருப்தியை தெரிவித்து இருந்தார். புளூடிக் வசதிக்கு மாதம் 20 டாலர் கட்டணம் என்பது மிகவும் அதிகம் என்றும் எலான் மஸ்க் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எலான் மஸ்க் 20 டாலர் புளூடிக் பயனர்களுக்கான கட்டணம் என்ற தகவல் வதந்தி என்றும் இன்னும் புளூடிக் பயனர்களுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
புளூடிக் கட்டணம்
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு திடீரென தனது டுவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்க், புளூடிக் பயனர்களுக்கான கட்டணம் எவ்வளவு என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ட்விட்டர் சமூக வலைதளத்தில் புளூடிக் வசதியை பெற்றவர்கள் மாதம் 8 டாலர் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த தொகை ஒவ்வொரு நாட்டின் கரன்சிக்கு ஏற்ப வேறுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
8 டாலர்
இதனை அடுத்து ட்விட்டரில் புளூடிக் வைத்திருப்பவர்கள் மாதம் 8 டாலர் செலுத்த வேண்டும் என்பதும் உறுதியாகியுள்ளது. கட்டணம் செலுத்த விட்டால் அவர்களுடைய புளூடிக் நீக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ட்விட்டர் பயனாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications