உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா அமெரிக்கா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் தொழிற்சாலைகளைக் கொண்டு உலகளவில் தனது தயாரிப்புகளைச் சப்ளை செய்து வரும் வேளையில் தனது 6வது ஜிகாபேக்டரியை மெக்சிகோ நாட்டில் கட்ட திட்டமிட்டு வருகிறது.
இதேவேளையில் இந்தியாவிலும் புதிய டெஸ்லா தொழிற்சாலை அமைப்பது குறித்துப் பல வருடங்களாக இந்திய அரசும், டெஸ்லா உயர்மட்ட அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆனால் கடந்த சில வருடத்தில் இந்தியாவில் இருந்து உதிரிபாகங்களை 1 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது டெஸ்லா.

டெஸ்லா தொழிற்சாலையை இந்தியாவிற்குக் கொண்டு வர மத்திய அரசு தரப்பில் இருந்து மட்டும் அல்லாமல் டெஸ்லாவும் பல முயற்சிகள் எடுத்து வரும் வேளையில் 5 ஆண்டுகளுக்கு வரிச் சலுகை அளிக்கும் புதிய விவாதம் துவங்கியுள்ளது. இதனால் டெஸ்லா இந்தியா வருகை குறித்த எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையைப் பார்வையிட மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் சென்றுள்ளார். பியூஷ் கோயல்-ன் அமெரிக்கப் பயணத்தில் டெஸ்லா தொழிற்சாலைக்குச் சென்றது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
டெஸ்லா தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்த பியூஷ் கோயல் தனது டிவிட்டரில் திறமையான இந்தியப் பொறியாளர்கள் மற்றும் நிதி வல்லுநர்கள் மூத்த பதவிகளில் பணிபுரிவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் டெஸ்லாவின் செயல்பாடுகளை மாற்றியமைக்கும் குறிப்பிடத்தக்கப் பயணத்தில் இந்தியர்கள் பங்களிக்கின்றனர் என்று தனது பதிவில் தெரிவித்தார்.
டெஸ்லா எலக்ட்ரிக் வாகன சப்ளை செயினில் இந்தியாவிலிருந்து ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் சப்ளையர்களின் முக்கியத்துவத்தைப் பார்த்துப் பெருமிதம் கொள்கிறோம். இந்தியாவிலிருந்து அதன் உதிரிப்பாகங்கள் இறக்குமதியை இரட்டிப்பாக்கும் பயணத்தில் டெஸ்லா உள்ளது. மேலும் இந்தத் தருணத்தில் எலான் மஸ்க் உடனான சந்திப்பை தவறவிட்டுவிட்டேன், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என டிவீட் செய்தார்.
இதற்குப் பதில் அளிக்கும் வகையில் எலான் மஸ்க், அடுத்த 45 நிமிடத்தில் பியூஷ் கோயல் பதிவுக்குப் பதில் அளித்தார். இதில் நீங்கள் டெஸ்லா தொழிற்சாலையை நேரில் வந்து பார்வையிட்டது பெருமையான விஷயம், இன்று கலிபோர்னியாவுக்குப் வர முடியாமல் போனதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் விரைவில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று மஸ்க் எக்ஸ் X-ல் பதிவிட்டார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications