அமெரிக்க எல்லையில் கூட்டம் கூட்டமாக வெளிநாட்டினர் முறைகேடாக அந்நாட்டிற்குள் நுழைவது பெரும் பிரச்சனையாக மாறியிருக்கும் வேளையில் எலான் மஸ்க் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முக்கிய யோசனையை முன்வைத்துள்ளார். இது இந்தியர்களுக்குச் சாதகமாக உள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் அமெரிக்காவில் குடியேற்ற விதிகளைக் குறித்துப் பேசி புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளார். எலான் மஸ்க் டிவிட்டர் பதிவுகளுக்குப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கும் இதேவேளையில் மறுமுனையில் இவரை எதிர்க்கும் கூட்டமும் பெரிய அளவில் தான் உள்ளது.

அமெரிக்க அரசு திறமையான தொழிலாளர்களைச் சட்டப்பூர்வமாக நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பதற்காகவும், சட்டவிரோத குடியேற்றத்திற்குக் கடுமையான முற்றுப்புள்ளி வைப்பதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைவது அதிகரித்துள்ள வேளையில், அமெரிக்காவிற்குச் சட்டப்பூர்வமாக குடியேறுவோர்களுக்குச் சட்டப்பூர்வமாக நுழைவது மிகவும் கடினமாகி வருகிறது. இது பைத்தியக்காரத்தனம்! அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தைக் கடுமையான விதிகள் உடன் மூடிவிட்டு சட்டப்பூர்வமான குடியேற்றத்தை பெருமளவில் அதிகரிக்க வேண்டும் என்று டிவிட்டரில் எலான் மஸ்க் தெரிவித்தார்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக H-1B விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது என முக்கியமான தரவுகளை Box நிறுவனத்தின் சிஇஓ Aaron Levie டிவிட்டரில் பகிர்ந்தார். இந்தப் பதிவுக்குத் தான் எலான் மஸ்க் இப்பதிவை வெளியிட்டார்.
எலான் மஸ்க் கருத்து படி ஹெச்1பி விசா எண்ணிக்கையை அதிகரித்தால் இந்தியர்களுக்குப் பெரிய ஜாக்பாட்.
அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் 85000 பேருக்கு ஹெச்1பி விசாவுக்காக வழங்கப்படுகிறது, ஆனால் இந்த விசா பெறுவதற்காக விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 61 சதவீதம் அதிகரித்து இந்த ஆண்டு 780,884 ஆக உள்ளது. கடந்த ஆண்டு இதன் எண்ணிக்கை 483,927 ஆக இருந்தது.
அமெரிக்கா வந்து பணியாற்ற அதிக ஆர்வம் காட்டும் திறமையான ஊழியர்கள் மத்தியில் அதிகப்படியான ஆர்வம் இருக்கும் வேளையில், உயர்ந்த திறன் இல்லாத பல ஆயிரம் வெளிநாட்டினர் அமெரிக்காவுக்குள் முறையற்ற வகையில் நுழைந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications