உலகின் மிகப்பெரிய பில்லியனரான எலான் மஸ்க் ட்விட்டரினை வாங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ? என்ற அச்சத்திலேயே இருந்து வரும் சூழல் உள்ளது.
எனினும் இப்பிரச்சனை இதோடு முடிந்து விட்டதா? என்றால் நிச்சயம் இல்லை. ஏற்கனவே ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வந்த நிலையில் அவர்கள், அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும் என்று கூறப்பட்டது.
ரிமோட் ஓர்க்கா?
இதற்கிடையில் கடந்த புதன்கிழமையன்று எலான் மஸ்க் மெயில் மூலமாக ஊழியர்களிடம், ரீமோட் ஒர்க்கிங் மூலமாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். அப்படி ஏதேனும் அனுமதி வேண்டுமெனில் அதற்கு எலான் மஸ்கிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குறைந்தது 40 மணி நேரம் இருக்கணும்
அதுமட்டும் அல்ல ஊழியர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 40 மணி நேரத்திற்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக தெரிகிறது. ட்விட்டரில் இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிகிறது. இதேபோல் வாரம் 80 மணிநேர பணியாற்ற தயாராக இருக்க வேண்டும், இலவச உணவு போன்ற சில சலுகைகளும் குறைக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உங்களால் உடல் ரீதியாக அலுவலகத்திற்கு வர முடியவில்லை அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் அது புரிந்து கொள்ளத் தக்கது என்றும் எலான் மஸ்க் தனது மெயிலில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விடுமுறையை எடுத்துக் கொண்ட மஸ்க்
கொரோனா காலத்தில் ரீமோட் ஒர்க்கிங் மூலம் தொலைதூரத்தில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள், ட்விட்டர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள பகுதிக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், 60 நாட்களுக்குள் அதற்கான நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதோடு ஊழியர்கள் மத்தியில் ட்விட்டர் ஊழியர்களின் காலாண்டர்களில் இருந்து மாதாந்திர விடுமுறை நாட்களையும் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
எந்த அர்த்தமும் இல்லை
யாரேனும் தொலைதூரத்தில் இருந்து மட்டுமே பணிபுரிய முடியும் என்ற விதிவிலக்கு இருந்தால், அவர்களை பணி நீக்கம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை என மஸ்க் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் வெளியான தகவலின் படி சுமார் 1500 ஊழியர்கள் தொலைதூரத்தில் இருந்து பணியாற்றி வருவதாக கூறப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் வாங்குவதாக அறிவிக்கப்பட்ட பிறகு, குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு ஊழியர்களுக்கு ஒரு வருடத்திற்கு தொலைதூரத்தில் இருந்து வேலை செய்ய முடியும் என உறுதியளித்திருந்தது.
விளம்பர வருவாய் பாதிப்பு
தொடர்ந்து சர்வதேச பொருளாதாரமானது மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், இது விளம்பர வருவாயினை பாதிக்கலாம். நிறுவனங்கள் மந்த நிலையின் பிடியில் சிக்கித் தவிக்குபோது செலவுகளை குறைக்க திட்டமிடலாம். இதன் காரணமாக விளம்பரங்களை குறைக்கலாம். எதிர்காலத்தில் பொருளாதாரம் இன்னும் மோசமடையலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
விளம்பரங்களை பெரிதும் சார்ந்துள்ளோம்
இத்தகைய சவாலான சூழலில் விளம்பரங்களை மட்டுமே சார்ந்திருக்க முடியாது. ஆனால் எங்களை போன்ற நிறுவனங்கள் பெரிதும் விளம்பரங்களை சார்ந்தே உள்ளன. இது எங்களை மோசமாக பாதிக்கலாம். இதற்கிடையில் தான் ட்விட்டரின் ப்ளூ டிக்கிற்கு மாதத்திற்கு 5 டாலரில் இருந்து, 8 டாலராக உயர்த்தியுள்ளது. இது சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ மார்க் ஆகும்.
உயிர்வாழ கட்டணம் அவசியம்
ட்விட்டர் வாழ்வதற்கு இந்த கட்டணங்கள் அவசியம் என்றும் எலான் மஸ்க் ஊழியர்களிடம் கூறியுள்ளார். கணிசமான சந்தா வருவாய் இல்லையெனில் வரவிருக்கும், பொருளாதார மந்த நிலையில் ட்விட்டர் தப்பிக்காது என்றும் எலான் மஸ்க் ஊழியர்களிடம் கூறியுள்ளார். எங்களின் வருவாயில் பாதி சந்தாவாக இருக்க வேண்டும்.
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்க 13 பில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ள நிலையில், அதனை செலுத்த வேண்டிய கட்டாயத்திலும் உள்ளார்.
வட்டி செலவு
எலான் மஸ்க் வாங்கிய கடனுக்கு வட்டி செலவினங்கள் மட்டுமே 50 மில்லியன் டாலரில் இருந்து 1 பில்லியன் டாலராக இருக்கலாம் என சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் அறிக்கை தெரிவித்தது.
இதற்கிடையில் தான் ட்விட்டரை உயிர் வாழ வைக்க ட்விட்டரை வாங்கிய கையோடு சுமார் 3700 பேரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் திரும்ப அலுவலகம் வரும்படி கேட்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இன்று அப்படியில்லை
எலான் மஸ்க் வாங்குவதற்கு முன்பு ட்விட்டர் நிர்வாகம் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற ஊக்குவித்தது. அவர்களை இருந்த இடத்தில் இருந்தே பணியாற்ற அனுமதித்தது. ஆனால் நிலைமை அப்ப்டியில்லை. எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications