டெஸ்லா நிறுவனத்தின் மூலம் ஆட்டோமொபைல் துறையிலும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் விண்வெளி ஆராய்ச்சியிலும் தொடர்ந்து சாதனை படைத்து வரும் எலான் மஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நிலையிலும் அவரது சொத்து மதிப்பு தாறுமாறான வளர்ச்சி பதிவு செய்து உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
கொரோனா காலத்தில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்நிறுவனத்தின் கார்களுக்கு மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பு இருக்கும் காரணத்தாலும், உலக ஆட்டோமொபைல் உலகம் மொத்தமும் எலக்டரிக் கார்கள் பக்கம் திரும்பும் காரணத்தாலும் டெஸ்லா பங்குகள் தாறுமாறான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
இதேபோல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முதன் முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிச் சாதனை படைத்துள்ள நிலையில் எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு தாறுமாறான வளர்ச்சி அடைந்துள்ளது.
அடுத்தடுத்த அதிரடிகள்
எலான் மஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது இந்நிறுவன ஊழியர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தினாலும், அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியதன் வாயிலாகவும், டெஸ்லா நிறுவனத்தை முதல் முறையாக S&P 500 குறியீட்டின் கீழ் சேர்க்கப்பட்டு உள்ளது.
தடாலடி உயர்வு
எலான் மஸ்க் நிறுவனத்திற்குச் சாதகமாக அடுத்தடுத்த அறிவிப்புகள் வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் 15 பில்லியன் டாலர் வரையில் இவரது சொத்து மதிப்பு உயர்ந்து மொத்த அளவு 114 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
இதனால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறினார்.
டெஸ்லா
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் டெஸ்லா நிறுவனப் பங்குகள் அதிகப்படியாக 15 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ள அதேவேளையில் வர்த்தக முடிவில் 8.2 சதவீத வளர்ச்சியில் முடிவடைந்தது. இதனால் வர்த்தக முடிவில் எலான் மஸ்க் சொத்து மதிப்பு 6.3 பில்லியன் டாலர் மட்டுமே உயர்ந்து 97 பில்லியன் டாலராகக் குறைந்தது.
இதன் மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் 3வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
பிரிட்டன்
மேலும் டெஸ்லா நிறுவனத்திற்குச் சாதகமாக உலகில் அனைத்து நாடுகளும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அதிகளவிலான கவனத்தைச் செலுத்தி வருகிறது. இதில் முதல் படியாகப் பிரிட்டன் அரசு 2030 முதல் பிரிட்டன் நாட்டின் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை விற்பனை செய்யத் தடை விதிப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.
ஐரோப்பிய சந்தை
இதற்கு ஏற்றார் போல் அமெரிக்க நிறுவனமான டெஸ்லா, ஐரோப்பிய சந்தையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய ஜெர்மனியில் புதிய தொழிற்சாலையை அமைத்து வருகிறது.
இதேபோல் அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்கப் புதிய தொழிற்சாலையும், இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கப் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது டெஸ்லா.
ஸ்பேஸ் எக்ஸ்
அமெரிக்க மண்ணில் இருந்து முதன் முறையாக ஒரு தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பிச் சாதனை படைத்துள்ள நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மதிப்புச் சந்தையில் பல மடங்கு உயர்ந்துள்ளது.
அமெரிக்கா
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த வெற்றி மூலம் இனி வரும் காலத்தில் அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மற்றும் போக்குவரத்தில் தனியார் நிறுவனங்களுக்கு அதிகளவிலான வாய்ப்புகள் உருவாகும்.
கௌதம் அதானி
இதே செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் அதானி குழுமம் DHFL நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்ற முயற்சி செய்யத் துவங்கியுள்ளதை அடுத்துக் கௌதம் அதானி-யின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 9.49 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதன் மூலம் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 2.2 பில்லியன் டாலர் அதிகரித்து 25.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications