200 டிவிட்டர் ஊழியர்கள் பணிநீக்கம்.. ஆபீஸ்-ல் தூங்கிய Esther Crawford-ம் பணிநீக்கம்..!

உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமாக மாறும் பயணத்தில் வேகமாக சென்று கொண்டு இருக்கும் டிவிட்டரில் மீண்டும் 200 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிவிட்டரை எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு வாங்கிய பின்பு இந்த நிறுவனத்தை எப்படியாவது லாபத்திற்கு கொண்டு வர வேண்டும் என இலக்குடன் செயல்படும் எலான் மஸ்க் எந்த ஒரு முடிவை எடுக்கவும் தயங்குவது இல்லை, 7500 ஊழியர்கள் பணியாற்றும் டிவிட்டர் நிறுவனத்தில் தற்போது வெறும் 2000 பேர் பணியாற்றி வரும் நிலையில் தற்போது 200 பேரை பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எலான் மஸ்க்-ன் திட்டம் தான் என்ன..?

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை பல மடங்கு பெரியதாக உயர்த்துவதிலும், விரிவாக்கம் செய்வதிலும் வல்லவர். ஆனால் டிவிட்டர் ஆரம்பமே பெரிய நிறுவனமாக இருக்கும் காரணத்தால் இதை சரியான பாதையில் கொண்டு செல்லவும், தனது இலக்குகளை அடையவும் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் எலான் மஸ்க்-கிற்கு உள்ளது.

 டிவிட்டர்

டிவிட்டர்

இந்த நிலையில் தான் டிவிட்டரில் அதிகப்படியான மறுசீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றி 1 வருடம் முடிவதற்குள் 5500 ஊழியர்களை பணிநீக்கம் செய்தும் உலகளவில் பல அலுவலகங்களை மூடியுள்ளது இந்த நிலையில் தற்போது கூடுதலாக 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் SLACK, மெயில் ஐடி ஆகியவை முடக்கப்பட்டதாகவும், சக ஊழியர்களிடம் பேசுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளதாக இந்த பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட 5 ஊழியர்கள் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

 200 ஊழியர்கள்

200 ஊழியர்கள்

எலான் மஸ்க் நிர்வாகம் இந்த 200 ஊழியர்கள் பணிநீக்கத்தை சனிக்கிழமை இரவு மேற்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களும் பணிநீக்கம் குறித்து தெரிந்துக்கொண்டது மட்டும் அல்லாமல் நிறுவனம் தொடர்பான அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு உள்ளதையும் தெரிந்துக்கொண்டனர்.

முக்கிய அணி

முக்கிய அணி

இந்த பணிநீக்கத்தில் டிவிட்டர் நிறுவனத்தில் மெஷின் லேர்னிங், சைட் ரிலையபிளிட்டி போன்ற முக்கியமான பிரிவில் பணியாற்றிய ப்ராஜெக்ட் மேனேஜர்ஸ், டேட்டா சையின்டிஸ்ட், இன்ஜினியர்ஸ் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

வருமானத்தை உருவாக்கும் அணி

வருமானத்தை உருவாக்கும் அணி

இதேபோல் டிவிட்டர் நிறுவனத்தின் monetization infrastructure team அதாவது இந்நிறுவனத்திற்கு வருமானம் ஈட்டித்தரும் பிரிவு, இப்பிரிவில் 30க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வரும் வேளையில் தற்போது வெறும் 8 பேர் ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

 Esther Crawford பணிநீக்கம்

Esther Crawford பணிநீக்கம்

மேலும் டிவிட்டர் இதற்கு முன்பு கைப்பற்றிய பல நிறுவனங்களின் சிஇஓ-க்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றி இருந்தார், அதில் பலர் தற்போதைய பணிநீக்கத்தில் வெளியேற்றப்பட்டு உள்ளனர், இதில் முக்கியமாக Twitter அலுவலகத்திலேயே தூங்கிய Esther Crawford பணிநீக்கத்தில் மாட்டிக்கொண்டு உள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+