பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை எலான் மஸ்க் கையகப்படுத்தியுள்ள நிலையில், பற்பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதில் இந்தியாவினை சேர்ந்த தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வாலின் பணி நீக்கம் உள்பட பலவும் அடங்கும்.
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி ட்விட்டரை கையகப்படுத்த பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்.
முதலீடு எவ்வளவு?
இந்த ஒப்பந்தமானது 44 பில்லியன் டாலர் எனவும் அறிவிக்கப்பட்டது. இப்படி பல்வேறு அறிவிப்புகளுக்கு இடையில், ஒரு வழியாக ட்விட்டர் ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 44 பில்லியன் டாலர் என்ற நிலையில், அதில் எலான் மஸ்கின் சொந்த முதலீடு என்பதை 15 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருக்க விரும்பினார்.
பங்கு விற்பனை
இந்த கையகப்படுத்தலுக்கு டெஸ்லா ஆதாரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அவரின் வசம் உள்ள பங்குகளை விற்பனை செய்வதை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடன் வாங்கும் திட்டத்தினை கைவிட்ட மஸ்க், கடந்த ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சுமார் 15.5 பில்லியன் டாலர் மதிப்பிலான தன் வசம் உள்ள பங்குகளை விற்பனை செய்தார்.
எதிர்பார்ப்பு
இதற்கிடையில் எலான் மஸ்க் இந்த ஒப்பந்தத்திற்கு 27 பில்லியன் டாலர்களுக்கு மேல் பணமாக செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் வெள்ளி கிழமைக்குள் இறுதி செய்யப்படும் எனவும், ஒப்பந்தத்தை முடிப்பதற்காக வங்கிகளில் பல மில்லியன் டாலர்களை கடன் வாங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
வங்கிகளில் கடன்
ட்விட்டர் நிறுவனத்தை வாங்க அதன் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்ததை அடுத்து டெஸ்லா உள்ளிட்ட தனது நிறுவனங்களில் பங்குகளை அடமானம் வைத்து நிதி திரட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.
இது தவிர மோர்கன் ஸ்டான்லி, பேங்க் ஆப் அமெரிக்கா, மிட்சுபிஷி யுஎஃப்ஜே ஃபைனான்ஷியல் குழுமம், மிசுஹோ, பார்க்லேஸ், சொசைட்டி ஜெனரல் மற்றும் பிஎன்பி பாரிபஸ் பிரான் உள்ளிட்ட வங்கிகளில் 13 பில்லியன் டாலர் கடன் வாங்யுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் தான் உத்தரவாதம்
இந்த கடன் பட்டியலில் மார்கன் ஸ்டான்லி தனியாக 3.5 பில்லியன் டாலர் பங்கு வகிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்க பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில், இந்த கடன்களை திரும்ப செலுத்துபதற்கு ட்விட்டர் பொறுப்பாகும். தனிப்பட்ட முறையில் இந்த கடன்களுக்கு எலான் மஸ்க் பொறுப்பல்ல என்றும், ட்விட்டர் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரில் எலான் மஸ்க் பங்கு
தென் ஆப்பிரிக்காவில் பிறந்த எலான் மஸ்க் 220 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்தினைக் கொண்டுள்ள பில்லியனர் ஆவார். ஏற்கனவே எலான் மஸ்கின் வசம் ட்விட்டரின் 9.6% பங்குகள் இருந்த நிலையில், தற்போது ட்விட்டரை கையகப்படுத்தியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனம் இதுவரையில் லாபம் ஈட்ட முடியவில்லை. இங்கு பற்றாக்குறையே உள்ளது. தற்போது இந்த கையகப்படுத்தல் மேற்கொண்டு ட்விட்டரின் நிதி நிலையில் அழுத்தம் கொடுக்கலாம் என்றும் கூறப்பட்டது.
வளர்ச்சி பாதைக்கு எப்போது?
எனினும் தற்போது கடன் பிரச்சனைக்கு மத்தியில் எலான் மஸ்க் கையகப்படுத்தியுள்ள நிலையில், அதிரடியான பல நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளார். குறிப்பாக செலவு குறைப்பு நடவடிக்கைகள் பெரியளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ட்விட்டர் நிறுவனம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்ப தொடங்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications