டெக்சாஸ்: உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் தன்னுடைய 11 குழந்தைகளுக்காக டெக்ஸாஸில் 35 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒரு குடியிருப்பை வாங்கி இருக்கிறார். தற்போது இதுதான் அமெரிக்காவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது.
டெக்சாஸில் நவீன முறையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்பில் தன்னுடைய 11 குழந்தைகளுடன் வசிக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார். தன்னுடைய குழந்தைகள் அனைவரும் ஓரிடத்திலேயே ஒற்றுமையாக வளர வேண்டும் என விரும்பி தான் எலான் மஸ்க் இந்த குடியிருப்பை வாங்கியுள்ளார். நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் இந்த குடியிருப்பின் பரப்பளவு 14,400 சதுர அடி ஆகும்.

இந்த சொத்துக்கு பக்கத்திலேயே ஆறு படுக்கையறை கொண்ட மற்றொரு குடியிருப்பினை அவர் ஏற்கனவே சொந்தமாக வைத்திருக்கிறார். இந்த குடியிருப்பில் அவருடைய முன்னாள் வாழ்க்கை துணைவிகள் இருவரும் வசிப்பார்கள் என்றும் குழந்தைகள் அனைவரும் இந்த புதிய குடியிருப்பில் வசிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
அங்கிருந்து 10 நிமிட பயணத் தொலைவிலேயே எலன் மஸ்கின் வீடு அமைந்துள்ளது. எனவே குழந்தைகள் அனைவருடனும் ஒன்றாக நேரத்தை செலவிட வேண்டும் என கருதி எலான் மஸ்க் இந்த வீட்டை 35 மில்லியன் டாலர்கள் செலுத்தி வாங்கியுள்ளார்.
எலான் மஸ்கிற்கு மொத்தம் மூன்று மனைவிகளும் 11 குழந்தைகளும் இருக்கின்றனர். இவர்கள் முதல் இரண்டு மனைவிகளும் அவரை விட்டு பிரிந்து வாழ்கின்றனர். தற்போது எலான் மஸ்குடன் இருப்பவர் அவரது மூன்றாவது மனைவி Shivon Zilis.
அவர் எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனத்தில் அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார். எலான் மஸ்கிற்கு இவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இரண்டு வயதான Strider மற்றும் Azure ஆகியோர் இருக்கின்றனர். அண்மையில் தான் இவர்களுக்கு மூன்றாவதாக குழந்தை பிறந்தது.
இவர் எலான் மஸ்குடன் புதிய குடியிருப்பில் குழந்தையோடு குடி பெயர்ந்து விட்டார் என சொல்லப்படுகிறது. எலான் மஸ்கின் முதல் மனைவி , Justine Wilson ஆவார். இவ்விருவருக்கும் 5 குழந்தைகள் உள்ளனர். 2000ஆம் ஆண்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். 2002இல் இவர்களுக்கு நெவாடா என்ற குழந்தை பிறந்து இறந்துவிட்டது. பின்னர் 2004ஆம் ஆண்டில் Griffin மற்றும் Vivian என்ற இரட்டையர்களும், Kai, Saxon மற்றும் Damian என்ற மூன்று குழந்தைகள் 2006இலும் பிறந்தனர்.
பின்னர் பாடகி Grimesஐ திருமணம் செய்து கொண்டார் எலான் மஸ்க். அவருடன் இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். 4 வயதான X AE A-XII, வயதான Exa Dark Sideræl மற்றும் Techno Mechanicus ஆகியோர் ஆகும். தற்போது இருவரும் பிரிந்துவிட்டனர். குழந்தைகளை யார் கஸ்டடி எடுப்பது என்பது குறித்து சண்டை நீடித்து வருகிறது.
மஸ்க் தற்போது வாங்கி இருக்கும் குடியிருப்பில் 11 குழந்தைகளும் , அருகில் உள்ள ஆறு படுக்கையறை கொண்ட வீட்டில் முன்னாள் மனைவிகளும் வசிப்பார்கள் என சொல்லப்படுகிறது. எலான் மஸ்க் 264 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு கொண்டிருக்கிறார்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications