டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் புதிய தொழில்நுட்பத்தில் மிகவும் ஆர்வம் காட்டுபவர் என்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் எலான் மஸ்க்-ன் டெஸ்லா நிறுவனம் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வரும் பிட்காயின் மீது சுமார் 1.5 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான அடுத்த 24 மணிநேரத்தில் பிட்காயின் மதிப்பு கிட்டத்தட்ட 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் கிரிப்டோகரன்சி சந்தையில் முதலீடு செய்யப்படும் அளவின் எண்ணிக்கை கிட்டதட்ட 4 மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் எலான் மஸ்க் தற்போது ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எலான் மஸ்க் தனது 9 மாத மகன் X Æ A-Xiiக்கு மீம் அடிப்படையாக வைத்து வர்த்தகம் செய்யப்படும் டிஜிட்டல் கரன்சியான டோஜ்காயின்-ஐ வாங்கிக்கொடுத்துள்ளார். இதுகுறித்து எலான் மஸ்க் தனது டிவிட்டரில் X Æ A-Xiiக்கு வாங்கிக்கொடுத்துள்ளேன், இதன் மூலம் குழந்தை டிஜிட்டல் கரன்சி உரிமையாளராக X இருப்பான் என டிவீட் செய்துள்ளார்.
இந்த டிவீட் உடன் தனது மகனின் கியூட் வீடியோவையும் பதிவேற்றம் செய்துள்ளார்.
2013ஆம் ஆண்டில் விளையாட்டாகத் துவங்கப்பட்ட ஒரு டிஜிட்டல் கரன்சி தான் இந்த டோஜ்காயின், Shiba Inu நாய் குட்டியை சிம்பிள் ஆக இருக்கும் இந்த டிஜிட்டல் கரன்சி 2021ல் மட்டும் சுமார் 1,244.94 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. எலான் மஸ்க் முதலீடு செய்த காரணத்தால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 1000 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இன்று ஒரு டோஜ்காயின் மதிப்பு வெறும் 0.072627 டாலர் மட்டுமே, ஜனவரி மாத்தில் இதன் மதிப்பு 0.008939 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் ஒரு பிட்காயின் மதிப்பு 45,051.22 டாலராக உள்ளது.


Click it and Unblock the Notifications