அமெரிக்க அதிபர் தேர்தலில் முதன்முதலாக மெலிண்டா பிரஞ்சு கேட்ஸ், தனது ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸின் முன்னாள் மனைவி ஆவார். இந்த முறை அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக மெலிண்டா கூறியுள்ளார். இது டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலான் மஸ்குக்குப் பிடிக்கவில்லை.
இதை மேற்கத்திய நாகரிகத்தின் தோல்வி என்று மஸ்க் விமரிசித்துள்ளார். மெலிண்டாவைப் போலவே அமேசான் அதிபர் ஜோ பேசோஸின் முன்னாள் மனைவி செயின் கிளேரும் ஜோ பைடனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கும் எலான் மஸ்க் கோபமாக கருத்து கூறியுள்ளார். அமெரிக்காவின் பெரும் பணக்கார கணவர்களின் முன்னாள் மனைவிகளின் போக்கால் தான் மேற்கத்திய நாகரிகம் வீழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நான் இதுவரை எந்த அதிபர் வேட்பாளருக்கும் ஆதரவு தந்ததில்லை. ஆனால் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் நான் சும்மா இருக்கப் போவதில்லை. ஏனென்றால் இந்த முறை பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும் என்று மெலிண்டா பதிவிட்டுள்ளார்.
அறச்செயல் என்ற போர்வையில் சில சூப்பர் வில்லன்கள் பின்தொடப்படுகிறார்கள் என்று ஜெப் பேசோஸ் முன்னாள் மனைவி செயின் கிளேர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஆம் என்று மஸ்க் பதிலளித்துள்ளார். மெலிண்டாவை போலவே பில் கேட்ஸையும் மஸ்க் விரும்பியதில்லை.
மஸ்கின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் டெஸ்லாவின் சிஇஓவான மஸ்க் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மீது கோபமாக உரைத்திருக்கிறார். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதாகக் கூறிக் கொண்டு கம்பெனியில் முதலீட்டை எப்படி குறைக்க முடியும். இதெல்லாம் பாசாங்கு என்று தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதிய வால்டர் ஐசாக்சன்னிடம் மஸ்க் கூறியுள்ளார்.
ஜோ பைடன் மீது உள்ள வெறுப்பின் காரணமாக மெலிண்டாவை மஸ்க் விமரிசித்திருக்கலாம். இதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது. 2021 எலக்ட்ரிக் வாகன மாநாட்டில் இருந்து டெஸ்லா நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பைடனை மஸ்க் கடுமையாக விமரிசித்து வருகிறார்.
எலக்ட்ரிக் வாகன மாநாட்டை ஜோ பைடன் நடத்தினார். ஆனால் டெஸ்லாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு, கிரிஸ்லர், யூஏடபிள்யூ ஆகிய நிறுவனங்களுக்கு அழைப்பு தரப்பட்டது.
நவம்பரில் ஒரு பத்திரிகையாளரிடம் மஸ்க், ஜோ பைடனுக்கு ஓட்டு போடப்போவதில்லை என்று கூறினார். இப்போது டொனால்டு டிரம்பிடம் மஸ்க் நெருக்கமாக உள்ளார்.
கடந்த வாரம், மஸ்க் ஒரு டெஸ்லா பங்குதாரர் கூட்டத்தில் டிரம்ப்பிடமிருந்து தனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்ததாகக் கூறினார். முன்னாள் அதிபர் டிரம்ப்புடன் சில முறை பேசியிருக்கிறேன். அவர் எந்த காரணமும் இல்லாமல் என்னை வெளியே அழைக்கிறார். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை என்றார் மஸ்க்.
Story written by: Jayachandran
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications