அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடக்கும் வேளையில் டெமாக்ரடிக் கட்சி சார்பாக மீண்டும் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் கூட்டணி மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டிப்போட உள்ளது. இதுவே எதிர்கட்சியான ரிபப்ளிக் கட்சி சார்பாக பலர் அதிபர் தேர்தலுக்கு போட்டிப்போட உள்ளனர்.
இதில் முக்கியமாக ரிபப்ளிக் கட்சி கட்சியை சேர்ந்த 4 இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் அதிபர் பதவிக்கு நிற்க போட்டிப்போட்டு வரும் வேளையில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது பெரிய அளவிலான எதிர்பார்ப்பு அமெரிக்க மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல், இந்திய மக்கள் மத்தியிலும் உள்ளது.
அதிபர் பதவிக்கு நிற்க போட்டிப்போட்டு ரிபப்ளிக் கட்சியினர் மத்தியில் தமிழ் பேசும் குடும்பம், கேரளாவை தொடர்புடன் இருக்கும் விவேக் ராமசாமி குறித்து பலரும் வியந்து பேசிவரும் வேளையில், தற்போது இவருடைய இண்டர்வியூவ் பார்த்த எலான் மஸ்க் விவேக் ராமசாமி-ஐ மிகவும் நம்பிக்கைக்குரிய வேட்பாளர் என்று தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய பில்லியனர், டெஸ்லா, டிவிட்டர் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், குடியரசுக் கட்சியில் இருந்து அதிபர் பதவிக்கு வேட்பாளராக நாமினேஷன் செய்திருக்கும் இந்திய-அமெரிக்க வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி-யை பாராட்டியுள்ளார்.
முன்னாள் ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளர் டக்கர் கார்ல்சன் நடத்திய நேர்காணலின் வீடியோவை பார்த்த எலான் மஸ்க், விவேக் ராமசாமி பேச்சை கேட்டு வியந்து தனது டிவிட்டரில் இந்த வீடியோ உடன் பதிவிட்டு உள்ளார். இந்த நேர்காணலில் விவேக் ராமசாமி அமெரிக்காவுக்கான தனது பார்வையையும், எதிர்காலத்தை குறித்து பேசினார்.
இந்த வீடியோ பார்த்து முடித்த எலான் மஸ்க் விவேக் ராமசாமியை "மிகவும் நம்பிக்கைக்குரிய வேட்பாளர்" என்று டிவீட் செய்துள்ளார். விவேக் ராமசாமி 37 வயதான குடியரசுக் கட்சியின் இளைய ஜனாதிபதி வேட்பாளர் ஆவார்.
விவேக் ராமசாமி வணிகம், பொருளாதாரம், சுகாதாரம், அரசியல், வரலாறு மற்றும் புவிசார் அரசியல் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளும் திறமையான மற்றும் வெற்றிகரமான தொழில்முனைவோர் ஆவார். விவேக் ராமசாமி அமெரிக்கத் தொழிலதிபர், எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆர்வலர் ஆவார்.

விவேக் ராமசாமி ஆகஸ்ட் 9, 1985 ஓஹியோவின் சின்சினாட்டியில் பிறந்து வளர்ந்தார்.இவருடைய பெற்றோர்கள் இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து அமெரிக்காவிற்குக் குடியேறியவர்கள்.
அவரது தந்தை வி.ஜி. ராமசாமி, கேரளாவில் உள்ள ஒரு பிராந்திய பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றார், பின்னர் ஓஹியோவின் ஈவென்டேலில் உள்ள ஜெனரல் எலக்ட்ரிக் ஆலையில் பணிபுரிந்தார். அவரது தாயார் கீதா, சின்சினாட்டியில் முதியோர் மனநல மருத்துவராக இருந்தார்.
2022 இல், அவர் ஸ்டிரைவ் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை இணைந்து நிறுவினார் மற்றும் தற்போது செயல் தலைவராகப் பணியாற்றி வருகிறார். ஸ்டிரைவுக்கு முன், அவர் உயிரி மருந்து நிறுவனமான Roivant Sciences ஐ நிறுவியது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பல புத்தகத்தை எழுதியுள்ளார்.


Click it and Unblock the Notifications