உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் மகன் தனது பெயரையும் பாலினத்தையும் மாற்ற இருப்பதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அவர்களின் மகன் அலெக்சாண்டர் மஸ்க் என்பவர் தனது புதிய பாலின அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் சட்டபூர்வமாக தனது பெயரை மாற்ற மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அலெக்சாண்டர் மஸ்க் என்று அழைக்கப்பட்ட எலான் மஸ்க் மகன் ஒரு கட்டத்தில் தான் திருநங்கை என்பதை புரிந்து கொண்டதும், தனது பெயரையும் பாலினத்தையும் மாற்ற மனுதாக்கல் செய்துள்ளார்.
எலான் மஸ்க் மகன்
அமெரிக்க அரசின் சட்டத்தின்படி ஒருவருக்கு 18 வயது பூர்த்தியாகியிருந்தால் பெயர், பாலினத்தை மாற்றி கொள்ளலாம். அந்த வகையில் அலெக்சாண்டர் மஸ்க் தனது 18 வது பிறந்த நாளை கொண்டாடிய மறுநாளே தனது பெயரை விவியன் ஜென்னா வில்ஸன் என மாற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
பெயர் மாற்றம்
பெயர் மாற்றத்திற்கான காரணத்தை அவர் குறிப்பிடும்போது 'இனிமேல், நான் எந்த வகையிலும் எனது உயிரியல் தந்தையுடன் வாழ விரும்பவில்லை என்றும் அவருடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை என்றும் அதனால் பெயரை மாற்றுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
தாய் மீது பாசம்
விவியன் ஜென்னா வில்ஸன் என்ற பெயரில் 'வில்சன்' என்பது அவரது தாயாரின் பெயர் ஆகும். தனது தாயாரின் மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்டுள்ள அவர் தனது தாயாரின் பெயரை தன்னுடைய பெயருடன் சேர்த்து கொண்டார்
திருமணம் - விவாகரத்து
எலான் மஸ்க், வில்சன் என்பவரை கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து அதன்பின் 2008ல் விவாகரத்து செய்துவிட்டார். இந்த தம்பதிகளுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒருவர் தான் விவியன் ஜென்னா வில்ஸன் என்பது குறிப்பிடத்தக்கது.
விளக்கம் இல்லை
சேவியர் அலெக்ஸாண்டர் பாலின மாற்றம் செய்து கொள்வது குறித்து எலான் மஸ்க் மற்றும் அவரது குடும்பத்தினர்களிடம் இருந்து எந்த விளக்கமும் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை என்பதும், ஊடகங்கள் இதுகுறித்து அனுப்பிய இமெயிலுக்கு பதில் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications