எலான் மஸ்க் 2022 ஆம் ஆண்டில் பெரும் போராட்டத்திற்கு பின்பு ட்விட்டரை கையகப்படுத்திய நிலையில், தற்போது இத்தளம் கடுமையான நிதி நெருக்கடிகளையும், நிதி சவால்களையும் எதிர்கொண்டு வருவதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எலான் மஸ்க் கைப்பற்றிய சில மாதங்களுக்குள் மிகப்பெரிய லாபத்தை அள்ளிக்கொடுப்பேன் என்ற நம்பிக்கை கொடுத்து 44 பில்லியன் டாலருக்கு கடன் வாங்கி டிவிட்டரை வாங்கினார்.
ஆனால் இன்று டிவிட்டர் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவே தடுமாறி வருவதாக எலான் மஸ்க் ஒப்புக் கொண்டுள்ளார். எலான் மஸ்க் டிவிட்டர் ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு ஈமெயிலில், டிவிட்டர் தளம் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்பட்டாலும், பயனர் வளர்ச்சியில் தேக்கமடைந்து வருவதும், வருவாய் வளர்ச்சியில் தொய்வு அடைந்துள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதேவேளையில் எலான் மஸ்க் டொனால்டு டிரம்ப்-ஐ அமெரிக்க அதிபராக வெற்றிப்பெற வைக்க 270 மில்லியன் டாலர் அளவிலான நிதியை நன்கொடையாக கொடுத்தார். ஆனால் தற்போது டிவிட்டர் நிதிநிலை மோசமாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த நிலையில் இருந்து மீண்டு வர ஊழியர்கள் மீண்டும் பணிநீக்கம் செய்யப்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எலான் மஸ்க் டிவிட்டரை வாங்குவதற்கான நிதியை திரட்ட பல்வேறு வங்கிகள் இணைந்து 13 பில்லியன் டாலர் கடனை அளித்தது. தற்போது டிவிட்டர் லாபகரமான மாற முடியாத நிலையில் டிவிட்டர் வாங்குவதற்கு கடன் கொடுத்த வங்கிகள், இக்கடனின் ஒரு பகுதியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது அடுத்த பெரிய அதிர்ச்சியாகும்.
பேங்க் ஆஃப் அமெரிக்கா, பார்க்லேஸ் மற்றும் மோர்கன் ஸ்டான்லி ஆகியவை தற்போது இந்த 13 பில்லியன் டாலர் கடனில் தனது பங்கை விற்பனை செய்ய தீவிரமாக முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எலான் மஸ்க் தலைமையிலான டிவிட்டர் வாங்கிய கடனுக்கு மட்டும் வருடாந்திர அடிப்படையில் சுமார் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை வெறும் வட்டியை மட்டுமே செலுத்தி வருகிறது. இதுதான் டிவிட்டரின் நிதிநிலையில் பெரும் சுமையாக உள்ளது.
எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய சில மாதங்களுக்குள் பாசிடீவ் கேஷ் ஃப்லோ-வுக்கு வருமோம் என நம்பிக்கை கொடுத்தால், ஆனால் தற்போது செலவுக்கும் வருமானத்திற்கும் மத்தியிலான் பிரேட் ஈவன் எட்ட முடியாமல் தவிப்பதாக எலான் மஸ்க் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய ஈமெயிலில் தெரிவித்துள்ளார்.
இதோடு எலான் மஸ்க் இந்த ஈமெயிலில் டிவிட்டரை போலவே தற்போது பல நிறுவனங்கள் ஃப்ரி ஸ்பீச்-க்கு ஆதரவு அளிப்பதாலும், விளம்பர போட்டி இருப்பதாலும் வருவாய் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளையில் எலான் மஸ்க் டிவிட்டரை அறிமுகம் செய்த பின்பு இத்தளத்தில் வேலைவாய்ப்புகள் விளம்பர பிரிவு, வீடியோ பிரிவு மற்றும் AI தொழில்நுட்பத்தில் இயங்கும் சாட்பாட் குரோக் ஏஐ போன்ற புதிய அம்சங்களை அறிமுகம் செய்திருந்தாலும், இந்த முயற்சிகள் கணிசமான வருவாய் ஈர்க்கும் சக்தியாக மாறவில்லை.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications