சீன அரசு கிரிப்டோகரன்சி வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்குத் தடை விதிக்கப்பட்ட போது பிட்காயின் மதிப்பு தொடர் சரிவில் 30000 டாலருக்கும் குறைவாகச் சரிவை சந்தித்தது.
இதேகாலகட்டத்தில் டோஜ்காயினின் தந்தை எனச் செல்லமாக அழைக்கப்படும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் பிட்காயினில் இனி முதலீடு செய்யப்போவதும் இல்லை, டெஸ்லா நிறுவனமும் இனி பிட்காயினைப் பேமெண்ட் ஆக ஏற்காது என அறிவித்தது.
இதனால் கிரிப்டோ முதலீட்டாளர்கள் போட்ட பணம் எல்லாம் கோவிந்தா தான் என நினைக்கும் போது எலான் மஸ்க் தற்போது முக்கியமான முடிவை எடுத்துள்ளார்.
எலான் மஸ்க் முடிவு
டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் விரைவில் டெஸ்லாகப் பிட்காயினைப் பேமெண்ட் ஆக ஏற்க உள்ளது எனத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து கிரிப்டோ முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டுச் செய்து வருகின்றனர்.
எல் சல்வடோர் அறிவிப்பு
மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோர், மே 9ஆம் தேதி பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாகப் பயன்படுத்த அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் இந்நாட்டின் எரிமலையில் உள்ள வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரித்து அதைப் பிட்காயின் உற்பத்திக்குப் பயன்படுத்த உள்ளதாக இந்நாட்டின் அதிபர் Nayib Bukele தெரிவித்துள்ளார்.
பிட்காயினின் ஒரு மாத தடுமாற்றம்
சீனா மற்றும் டெஸ்லா பின்வாங்கிய பின்பு பிட்காயின் மதிப்பு 29000 டாலரில் வர்த்தகம் செய்து வந்த நிலையில், எல் சல்வடோர் அறிவிப்புக்குப் பின் 34000 டாலர் வரையில் உயர்ந்து நிலைப்பெற்றது. இந்நிலையில் தற்போது எலான் மஸ்க் மீண்டும் பிட்காயினை டெஸ்லா தளத்தில் பேமெண்ட் ஆகக் கொண்டு வர முடிவு செய்துள்ள நிலையில் பிட்காயின் மதிப்பு 40000 டாலரை தாண்டியுள்ளது.
பிட்காயின் இன்றைய மதிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் பிட்காயின் மதிப்பு 41,046 டாலர் வரையில் உயர்ந்து 1.33 சதவீதம் அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2021ஆம் ஆண்டில் இருந்து 38.48 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications