அமெரிக்காவில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக நிதி திரட்டும் குழுவிடம் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் ஒரு பெரும் தொகையை தேர்தல் செலவுக்கான நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் எலான் மஸ்க் உள்பட பல செல்வந்தர்களை டொனால்டு டிரம்ப் சந்தித்தார். அப்போது தன்னை தேர்தலில் ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவருக்காக நிதி திரட்டும் அமெரிக்கா பிஏசி என்ற குழுவிடம் பெரும் தொகையை எலான் மஸ்க் நன்கொடையாகத் தந்துள்ளார். இதுவரை டொனால்டு டிரம்புக்காக நன்கொடை தந்தவர்களின் விவரத்தை அமெரிக்கா பிஏசி குழு நாளை வெளியிடுகிறது.

அமெரிக்காவில் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் தொடங்குகிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் வேட்பாளராகக் களம் இறங்குகிறார். டிரம்புக்கு இந்தளவு ஆதரவை மஸ்க் தருவதற்கு ஒரு முக்கியக் காரணம் உள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஒரு எலக்ட்ரிக் வாகன மாநாட்டை ஜோ பைடன் அரசு நடத்தியது. இதில் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்துக்கு அழைப்பு தரப்படவில்லை.
டெஸ்லா எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பில் மும்முரமாக இறங்கியுள்ளது. சீனாவில் அதன் ஆள் இல்லா கார் உற்பத்தி ஆலையை நிறுவி தீவிரமாக செயல்பட்டு வருகிறார் எலான் மஸ்க். இந்த நிலையில் தனது நிறுவனமான டெஸ்லாவுக்கு அழைப்பு விடாததற்கு பகிரங்கமாக அதிபர் ஜோ பைடனுக்கு கண்டனம் தெரிவித்தார் எலான் மஸ்க். இருந்தாலும் அதை ஜோ பைடன் அரசு கண்டுகொள்ளவில்லை.
இதனால் ஜோ பைடன் மீது எலான் மஸ்க் கடும் கோபம் அடைந்தார். ஜோ பைடனுக்கு தனது ஆதரவை தந்த பில்கேட்ஸ் முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸுக்கும், அமேசான் அதிபர் ஜெப் பேசோஸ் முன்னாள் மனைவிக்கும் எலான் மஸ்க் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
இதுபோன்ற பணக்காரர்களின் முன்னாள் மனைவிகளின் நடத்தையால்தான் மேலைநாட்டு கலாசாரம் செத்து வருகிறது என்று கடுமையாக சாடினார். இந்த நிலையில் டிரம்புக்கு பெரும் நிதியை மஸ்க் அளித்துள்ளார்.
Story written by: Jayachandran
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications