ஒரு வழியாக டிவிட்டர் நிறுவனத்தைப் பெரும் போராட்டத்திற்குப் பின்பு எலான் மஸ்க் சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார்.
எலான் மஸ்க்-ன் 5 நிறுவனமும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், புதிய துறையில் புதிதாக ஒரு நிறுவனத்தை அதுவும் 44 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகைக்கு வாங்குவது எதற்காக..?
அதுவும் சமூகவலைத்தள நிறுவனங்கள் அதிகப்படியான தடுமாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையிலும், 30 பில்லியன் டாலர் மதிப்பிலான டெஸ்லா பங்குகளை விற்பனை செய்து டிவிட்டர் நிறுவனத்தை வாங்க என்ன காரணம்..?
எலான் மஸ்க்-ன் கனவு திட்டமான X செயலி-யை சாத்தியமாக்கப்போவது டிவிட்டர் தான்.
எலான் மஸ்க் - டிவிட்டர்
வியாழக்கிழமை எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கும் யோசிக்கும் முன்பே பொது ஆலோசகர் சீன் எட்ஜெட் உட்பட 4 உயர் அதிகாரிகள் தங்களது பணியை விட்டு நீக்கப்பட்டு உள்ளனர்.
டிவிட்டர் மேனேஜர்கள் - டெஸ்லா மேனேஜர்கள்
இந்த நிலையில் டிவிட்டர் நிறுவன மேனேஜர்களையும், டெஸ்லா மேனேஜர்களை நேரடியாகச் சந்தித்து, எலான் மஸ்க் தலைமையிலான நிர்வாகம் மற்றும் பணிகள் எப்படி இருக்கும் என்பதை விவரிக்க மஸ்க் இக்கூட்டத்தை முதல் நாளிலேயே ஏற்பாடு செய்துள்ளார். இதன் மூலம் நிர்வாக மாற்ற பிரச்சனைகள் இருக்காது.
டிவிட்டர் தள மேம்பாடு
இதைத் தொடர்ந்து எலான் மஸ்க் டிவிட்டர் தளத்தில் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தத் தீவிரமாக உள்ளார், அதேபோல் வருமானத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளார்.
முதல் கட்ட திட்டம்
இதன் படி முதல் கட்டமாக டிவிட்டர் வாடிக்கையாளர் மத்தியில் சிறிய கட்டணத்தை வசூலிக்கவும், போலி மற்றும் ஸ்பாம் கணக்குகளைக் குறைக்கவும், மக்களுக்குச் சுதந்திர பேச்சு உரிமை அளிக்க வேண்டும் என்பதற்காகக் கொள்கை மாற்றங்களைச் செய்யவும், அனைத்து ஊழியர்களுக்கும் EDIT பட்டன் சேவையை அளிக்கவும் திட்டமிட்டு உள்ளார் எலான் மஸ்க்.
X செயலி
ஆனால் இது வெறும் ஆரம்பம் தான், எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியதே தனது கனவு செயலியான X-யை உருவாக்குவது தான். இதை X எனச் சுருக்கமாகக் கூறினாலும் இச்செயலி திட்டத்தின் முழுப் பெயர் X "everything app".
X “everything app” திட்டம்
இந்தச் செயலியில் சோஷியல் மீடியா முதல், மெசேஜிங் சேவை, உணவு டெலிவரி சேவை, பேமெண்ட் எனப் பல சேவைகளை ஓரே தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு உலகம் முழுவதும் அளிக்க வேண்டும் என்பது தான் எலான் மஸ்க்-ன் திட்டம்.
சீனா டென்சென்ட்
சீனா-வின் டென்சென்ட் நிறுவனம் Wechat செயலி மூலம் இதேபோன்ற சேவையை அளிக்கிறது குறிப்பிடத்தக்கது. இதை டிவிட்டர் வாயிலாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா என வித்தியாசம் இல்லாமல் உலகில் அனைத்து நாடுகளுக்கும் அளிக்க வேண்டும் என்பது தான் எலான் மஸ்க்-ன் திட்டம்.. இப்ப சொல்லுங்க டிவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்கியது சரியா..? இல்லையா..?
விளம்பரம்
இதேவேளையில் எலான் மஸ்க் தனது டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், போரிங் கம்பெனி, நியூராலிங்க், ஓப்பன்AI ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகள், சாதனைகளை டிவிட்டர் மூலம் எளிதாக விளம்பரம் செய்ய முடியும்.
விளம்பரம் மற்றும் மார்கெட்டிங்
குறிப்பாக டெஸ்லா, போரிங் கம்பெனி பல முக்கியத் தயாரிப்புகளை ரீடைல் சந்தையில் விற்பனை செய்யத் துவங்கியுள்ளது இதை விளம்பரம் மற்றும் மார்கெட்டிங் செய்ய டிவிட்டர் பெரிய அளவில் பயன் அளிக்கும். இதோடு விளம்பரம் மற்றும் மார்கெட்டிங்-கிற்காகச் செலவு செய்யப்படும் தொகையைச் சேமிக்க முடியும்.
முக்கியச் சவால்
ஆனால் தற்போது எலான் மஸ்க்-கிற்கு இருக்கும் முக்கியமான சவால் என்ன வென்றால் டிவிட்டர் நிறுவனத்தில் முதலீடு செய்யக் கூடுதலாக 5 -10 பில்லியன் டாலர் தொகை வேண்டும் இதை எப்படித் திரட்டப் போகிறார் என்பது தான் முக்கியமான விஷயமாக உள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications