உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் உற்பத்தியாளரான டெஸ்லா நிறுவனம், அடுத்த சில வருடங்களில் புதிய உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்கான திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக, டெஸ்லா நிறுவனம் இந்தியாவுக்கு வர தாமதமாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள தகவல் படி, டெஸ்லா நிறுவனம் அமெரிக்காவில் உள்ள தற்போதைய தொழிற்சாலைகளைப் பயன்படுத்தி, புதுமையான மற்றும் மலிவு விலை எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய மலிவு விலை கார்கள் இந்த ஆண்டின் இறுதியிலேயே சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மலிவு விலை காரை தான் டெஸ்லா இந்தியாவிலும் மெக்சிகோ-விலும் தயாரிக்க திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
டெஸ்லா நிறுவனம் கடந்த சில மாதங்களாக மெக்ஸிகோ மற்றும் இந்தியாவில் புதிய உற்பத்தி ஆலைகளை நிறுவுவதற்கான திட்டங்களை தீட்டி வந்தது. ஆனால், தற்போது அந்த திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
புதிய உற்பத்தி தளத்தை அமைப்பதற்கு முன்னதாக, 2023 ஆம் ஆண்டுக்குள் தங்களது உற்பத்தியை 50 சதவீதம் அதிகரிப்பதே தற்போதைய முக்கிய இலக்காக டெஸ்லா நிறுவனம் ஏற்றுக்கொண்டு உள்ளது. இதன் மூலம், ஓராண்டில் சுமார் 3 மில்லியன் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய இந்நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
டெஸ்லா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த புதிய முடிவின் காரணமாக, முன்பு கணிக்கப்பட்ட செலவின குறைப்பின் இலக்கை அடைய முடியாது, மூலதன செலவுகளை கட்டுப்படுத்தி கார் உற்பத்தியை அதிகரிக்க இது உதவும்" என்று டெஸ்லா தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 12 சதவீதம் உயர்ந்தது.
டெஸ்லா நிறுவனம் 25,000 டாலர்கள் விலையில், பொதுமக்கள் அதிகம் வாங்கக்கூடிய வகையில் மலிவுவிலை மாடல் 2 (Model 2) காரை அறிமுகப்படுத்தும் திட்டத்தை கைவிட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் இந்த தகவல்களை மறுத்தார்.
ஆனால், மார்ச் காலாண்டு முடிவுகள் மொத்த கதையையும் மாற்றியுள்ளது, அமெரிக்காவிலேயே மலிவு விலை கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது டெஸ்லா.
எலான் மஸ்க் இந்த வாரம் இறுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, இந்தியாவில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்கான முதலீட்டு திட்டம் குறித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது. எலான் மஸ்க் இந்திய பயணத்தை ரத்து செய்வதற்கான காரணம் இப்போது புரிந்துவிட்டது.
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் டெஸ்லா நிறுவனத்தின் லாபம் 55 சதவீதம் சரிந்து வெறும் 1.13 பில்லியன் டாலரை மட்டுமே லாபமாக பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்நிறுவன முதலீட்டாளர்களை மட்டும் அல்லாமல் எலான் மஸ்க் பேன்ஸ், டெஸ்லா பேன்ஸ்-க்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு அதே மார்ச் காலாண்டில் 2.51 பில்லியன் டாலரை லாபமாக டெஸ்லா பெற்று இருந்தது. இதேபோல் மார்ச் காலாண்டில் டெஸ்லா வருவாயில் 9 சதவீதம் சரிவை பதிவு செய்துள்ளது 2012க்கு பின்பு மோசமான சரிவை பதிவு செய்துள்ளது.
கடந்த வாரம், எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களிடையேயான போட்டி கடுமையாகி வருவதாலும், விற்பனை குறைவதாலும் செலவுகளை குறைக்கும் நோக்கத்துடன், டெஸ்லா 6,020 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications