அமெரிக்கப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEC, பிட்காயின் ETF திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்த பின்பு பல முன்னணி கிரிப்டோகரன்சிகள் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஷிபா இனு காயின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 50 சதவீதம் வரையில் உயர்ந்தது.
ஆனால் இந்த உயர்வு நீண்ட காலம் நீடிக்கவில்லை, இதற்கு மிக முக்கியக் காரணம் எலான் மஸ்க்.
ஷிபா இனு கிரிப்டோகரன்சி
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வர்த்தகத்தில் ஷிபா இனு கிரிப்டோகரன்சி விலை 0.000028 டாலரில் இருந்து 0.000045 டாலர் வரையில் அதிகரித்து. சந்தையில் புதிதாக வரும் முதலீட்டாளர்கள் பிரபலமான கிரிப்டோகரன்சியில் தொடர்ந்து முதலீடு செய்து வரும் காரணத்தால் ஷிபா இனு கிரிப்டோகரன்சி தடாலடியாக உயர்ந்துள்ளது.
ஷிபா இனு MCAP
இந்த உயர்வின் மூலம் மொத்த கிரிப்டோகரன்சி சந்தையில் ஷிபா இனு சந்தை மதிப்பு 17.54 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது. இதன் அடிப்படையில் 11வது மிகப்பெரிய கிரிப்டோகரன்சியாக ஷிபா இனு உயர்ந்துள்ளது.
எலான் மஸ்க்
இதேவேளையில் கடந்த 24 மணிநேர வர்த்தகத்தில் ஷிபா இனு-வின் விலை 0.000034 டாலராகச் சரிந்துள்ளது. இந்தச் சரிவுக்கு மிக முக்கியமான காரணம் எலான் மஸ்க். கிரிப்டோகரன்சியை அதிகம் ஆதரித்து வரும் எலான் மஸ்க் பிட்காயின், டோஜ்காயின், ஷிபா இனு உட்படப் பலவற்றுக்கு ஆதரவாக டீவிட் செய்துள்ளார்.
டிவிட்டர்
இந்நிலையில் ஷிபா இனு காயின் 50 சதவீத உயர்வு குறித்து வெளியான ட்வீட்டில் டிவிட்டர்வாசி ஒருவர் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து நீங்கள் ஷிபா இனு காயினில் எவ்வளவு முதலீடு செய்துள்ளீர்கள் எனக் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு எலான் மஸ்க் சற்றும் எதிர்பார்க்காத வகையில் பதில் அளித்துள்ளார்.
எதிரியம் மற்றும் டோஜ்காயின்
டிவிட்டர்வாசி-யின் கேள்வி பதில் அளித்த எலான் மஸ்க், தான் ஷிபா இனு காயினில் எவ்விதமான முதலீடும் செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார், இதைத் தொடர்ந்து அடுத்த ட்வீட்டில் தான் தனிப்பட்ட முறையில் எதிரியம் மற்றும் டோஜ்காயினில் மட்டுமே முதலீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த ட்வீட் வெளியான அடுத்த நிமிடமே ஷிபா இனு காயின் சரிய துவங்கியது.
கிரிப்டோகரன்சி விலை
தற்போது சர்வதேச கிரிப்டோ சந்தையில் பிட்காயின் - 61,903.60 டாலர் (1.58 சதவீத உயர்வு), எதிரியம் - 4,121.85 டாலர் (0.17 சதவீத உயர்வு), ரிப்பிள் - 1.09 டாலர் (0.43 சதவீத உயர்வு), உயர்வுகார்டானோ - 2.14 டாலர் (0.43 சதவீத சரிவு), போல்காடாட் - 43.78 டாலர் (0.86 சதவீத உயர்வு), டோஜ்காயின் - 0.2689 டாலர் (7.84 சதவீத சரிவு).


Click it and Unblock the Notifications