டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றும் பணியை நிறுத்தி வைத்துள்ள நிலையில் டெஸ்லா நிறுவனத்தில் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டு ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார்.
என்ன நடந்தது தெரியுமா..?
டெஸ்லா நிறுவனம்
உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டத்தில் பிசியாக இருந்தாலும் டெஸ்லா நிறுவனத்தின் முன்னேற்றங்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறார்.
எலான் மஸ்க்
இந்த நிலையில் நேற்று டெஸ்லா சிஇஓ-வான எலான் மஸ்க் அனைத்து ஊழியர்களையும் உடனடியாக அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற உத்தரவிட்டது மட்டும் அல்லாமல், வாரத்தில் குறைந்தது 40 மணி நேரம் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும் இல்லையெனில் இப்போதே பணியை விட்டு வெளியேறலாம் என ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்தார்.
அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பு
இந்த அறிவிப்பின் தாக்கத்தில் இருந்து வெளியில் வராத டெஸ்லா ஊழியர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி அளிக்கும் விஷயத்தை அறிவித்துள்ளார். இது டெஸ்லா ஊழியர்கள் மத்தியில் தாக்கத்தை மட்டும் அல்லாமல் பீதியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
10 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம்
இன்று எலான் மஸ்க் டெஸ்லா ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், எனக்குப் பொருளாதாரம் குறித்துத் தவறாகத் தோன்றுகிறது. இந்தப் பொருளாதாரப் பாதிப்பில் இருந்து தப்பிக்க டெஸ்லா நிறுவனத்தில் இருந்து 10 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டும் நிலை வரலாம் என்றும், உலக நாடுகள் அனைத்திலும் புதிதாக வேலைக்கு ஆட்களைச் சேர்க்கும் பணிகளை உடனடியாக நிறுத்தவும் உத்தரவிட்டு உள்ளார்.
ப்ளூ / ஒயிட் காலர்
மேலும் டிவிட்டரில் டெஸ்லா நிறுவனத்தில் ப்ளூ / ஒயிட் காலர் ஊழியர்கள் குறித்த டிவீட்-க்கு எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தில் எல்லோருக்கும் ஒரே உணவு, ஒரே பாத்ரூம் தான். எங்கு எக்ஸ்கியூடிவ் சீப் அல்லது பிற கார்பரேட் நிறுவனங்கள் போல் எதுவும் இல்லை.
தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகம் என இரண்டு பிரிவுகள் இருக்கக் கூடாது. எல்லோரும் தொழிலாளர்கள் தான்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications