Twitter: முதல் நாளே இரு இந்திய உயர் அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்த எலான் மஸ்க்..!

எலான் மஸ்க் தொட்டது எல்லாம் தங்கமாக மாறினாலும் அதை அடையப் பல போராட்டங்களும், வலிகளும் மிகுந்து உள்ளது என்றால் மிகையில் இதை டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மட்டும் அல்லாமல் தற்போது கைப்பற்றியுள்ள டிவிட்டர் நிறுவனத்திற்கும் பொருந்தும்.

எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் மூலம் சமுகத்தில் அனைவருக்கும் சமமான கருத்துச் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பது அடிப்படை நோக்கமாக இருந்தாலும், இதற்குப் பின்னால் மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் வருமானம் ஈட்டும் திட்டமும் உள்ளது.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் வொர்கிங் ஸ்டைல் எப்போதும் அதிரடி தான் பலரும் பேசி கேட்டு இருப்போம். அந்த வகையில் டிவிட்டர் கைப்பற்றிய முதல் நாளிலேயே எலான் மஸ்க் 3 உயர் மட்ட அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்ததில் இரண்டு பேர் இந்தியர்கள் என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.

இந்தியர்கள்

இந்தியர்கள்

உலக நாடுகளில் ஒருபக்கம் இந்தியாவில் பிறந்து ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற முன்னணி கல்லூரிகளில் படித்தவர்கள் வெளிநாடுகளில் முக்கிய நிறுவனத்தின் உயரிய பதவிகளில் உள்ளனர், மறுபுறம் வெளிநாட்டில் பிறந்த இந்திய வம்சாவளியினர் அரசியலில் முக்கியப் பதவிகளிலும், நிர்வாகக் குழுவிலும் உள்ளனர்.

75% ஊழியர்கள் பணிநீக்கம்

75% ஊழியர்கள் பணிநீக்கம்

இப்படியிருக்கும் சூழ்நிலையில் டிவிட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க் புதன்கிழமை 75 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என நேரடியாகத் தெரிவித்தார், ஆனால் உயர் அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்வது குறித்து ரகசியம் காத்துள்ளார்.

3 உயர் அதிகாரிகள் பணிநீக்கம்

3 உயர் அதிகாரிகள் பணிநீக்கம்

நீதிமன்றத்தின் காலக்கெடுவுக்கு ஒரு நாள் முன்னதாகவே டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ள எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால், தலைமை நிதியியல் அதிகாரி Ned Sega, சட்டக் கொள்கை, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் விஜயா காடே ஆகியோர் டிவிட்டர் நிறுவன பணியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

2 இந்தியர்கள்

2 இந்தியர்கள்

இதில் பராக் அகர்வால் இந்தியர், விஜயா காடே இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர் ஆவார். பராக் அகர்வால் ஐஐடி பாம்பே கல்லூரியில் பிடெக் கம்பியூட்டர் சையின்ஸ் இன்ஜினியரிங்-ம், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கம்பியூட்டர் சையின்ஸ் பிரிவில் Phd பட்டம் பெற்றுள்ளார்.

பராக் அகர்வால் சம்பளம்

பராக் அகர்வால் சம்பளம்

பராக் அகர்வால் சிஇஓ-வாகப் பதவியேற்ற போது வருடாந்திர சம்பளமாக 1 மில்லியன் டாலரும், 12.5 மில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனப் பங்குகளை (restricted stock units) 16 காலாண்டுகளுக்குப் பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இவருடைய சிஇஓ பதவி வெறும் ஒரு வருடகாலம் கூட நீடிக்கவில்லை என்பது சோகமான விஷயம்.

விஜயா காடே

விஜயா காடே

இதைத் தொடர்ந்து டிவிட்டர் நிறுவனத்தின் சட்டக் கொள்கை, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவராக இருந்த விஜயா காடே, எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய உடனே பணியில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்திய வம்சாவளி

இந்திய வம்சாவளி

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த விஜயா காடே, கார்னல் பல்கலைக்கழகத்தில் தொழிற்துறை மற்றும் தொழிலாளர் உறவுகளில் பட்டம் பெற்றார், 1997-2000-ல் நியூயார்க் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

இந்தியா டூ அமெரிக்கா

இந்தியா டூ அமெரிக்கா

விஜயா காடே இந்தியாவில் ஒரு தெலுங்கு குடும்பத்தில் பிறந்தார் மற்றும் மூன்று வயது இருக்கும் போது குடும்பத்துடன் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். அவரது குடும்பம் டெக்சாஸ், பியூமண்ட் நகருக்குக் குடிபெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.பியூமண்டில் கு க்ளக்ஸ் க்ளான் மூலம் தனது குழந்தைப் பருவம் பாதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

விஜயா காடே பெருமை

விஜயா காடே பெருமை

2014 ஆம் ஆண்டில், அவர் டிவிட்டரின் நிர்வாகக் குழுவில் மிகவும் சக்திவாய்ந்த பெண் என்று ஃபார்ச்சூன் அறிவித்தது. அக்டோபர் 2020 இல், பொலிட்டிகோ அவரை "நீங்கள் கேள்விப்படாத மிகச் சக்திவாய்ந்த தொழில்நுட்ப நிர்வாகி" என்றும் விஜயா காடே-வை பாராட்டியது.

டிவிட்டர் கொள்கை

டிவிட்டர் கொள்கை

எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய பின்பு பல்வேறு கொள்கைகளை மாற்றத் திட்டமிட்டு உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இதை விரும்பாத விஜயா காடே இப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். துன்புறுத்தல், தவறான தகவல் மற்றும் தீங்கிழைக்கும் பேச்சு போன்ற பிரச்சினைகளைக் கையாள்வது விஜயா காடே முக்கியப் பங்கு வகிக்கிறார்.

டெஸ்லா மேனேஜர்கள்

டெஸ்லா மேனேஜர்கள்

எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் ப்ராடெக்ட் மேனேஜர்கள், டிவிட்டர் மேனேஜர்களை நேரடியாகச் சந்தித்து எலான் மஸ்க்-ன் வொர்கிங் ஸ்டைல் மற்றும் நிர்வாக முறைகளை விளக்கியுள்ளனர். இது எலான் மஸ்க் உத்தரவில் நடந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+