பொதுவாக பெரும் தொழிலதிபர்கள் சமுக வலைத்தளத்திலும், மக்கள் மத்தியிலும் அதிக நேரம் செலவிடமாட்டார்கள்.
ஆனால் இவை அனைத்திற்கும் மாறுப்பட்டவர் எலான் மஸ்க், பல நிறுவனங்கள், பல புதுமைகளை உருவாக்கி வரும் பிசியான நேரத்திலும் சமுக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர், டிவிட்டரில் மட்டும் சுமார் 107 மில்லியன் பாலோவர்களை வைத்துள்ளார்.
இதேபோல் பல பிரபலமான யூடியூப் சேனல்கள், யூடியூபர்களுடன் நெருங்கி பழகக்கூடியவர். சொல்லப்போனால் தனது டெஸ்லா தொழிற்சாலை பல முன்னணி டெக் யூடியூபர்களுக்கு சற்றி காட்டியும் தனித்தனியாக பேட்டி கொடுத்தும் உள்ளார்.
இந்த நிலையில் ஒரு யூடியூபர்-க்கு மட்டும் சுமார் 8 கோடி ரூபாய் அளவிலான பணத்தை கொடுத்துள்ளார்.
மிஸ் பீஸ்ட்
உலகின் முன்னணி யூடியூப் சேனலாக ஆக அறியப்படும் மிஸ் பீஸ்ட்-ன் உரிமையாளர் அமெரிக்க யூடியூர் ஜிம்மி டொனால்டுசன் Lessons in 30s என்னும் மற்றொரு யூடியூப் சேனலில் பேட்டி கொடுக்கும் போது ஒரு முக்கியமான விஷயத்தை கூறியுள்ளார். மிஸ்டர் பீஸ்ட் சேனலில் அதிகளவில் நன்கொடை, நல திட்டங்கள் செய்யும் வீடியோ இருக்கும்.
எலான் மஸ்க்
இதை பார்த்த எலான் மஸ்க்-கிற்கு பிடித்துப்போகவே 2019 ல் ஜிம்மி டொனால்டுசன் நடத்திய முக்கியமான #TeamTree என்னும் நன்கொடை திரட்டும் திட்டத்தில் எலான் மஸ்க் சுமார் 1 மில்லியன் டாலர் அளவிலான நன்கொடையை அளித்துள்ளார் என இந்த பேட்டியில் மிஸ்டர் பீஸ்ட் ஜிம்மி தெரிவித்துள்ளார்.
20 மில்லியன் மரங்கள்
இந்த நன்கொடை கொண்டு மிஸ்டர் பீஸ்ட் ஜிம்மி, ஆர்பர் டே பவுண்டேஷன் நிறுவனத்துடன் இணைந்து சுமார் 20 மில்லியன் மரங்களை நட்டு உள்ளனர்.
மிஸ்டர் பீஸ்ட் ஜிம்மி
இந்த #TeamTree என்னும் நன்கொடை திரட்டும் திட்டத்தின் மூலம் 20 மில்லியன் டாலர் அளவிலான தொகையை திரட்ட திட்டமிட்டு இருந்த நிலையில் 6 மில்லியன் டாலர் அளவை எட்டிய பின்பு நின்று விட்டது என மிஸ்டர் பீஸ்ட் ஜிம்மி இப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.
யூடியூபர் Marques Brownlee
எலான் மஸ்க்-கிற்கு இந்த நிதி திரட்டும் திட்டம் குறித்து சொன்னது மற்றொரு யூடியூபர் ஆன Marques Brownlee (MKBHD) தான், இதை பார்த்ததும் பிடித்துப்போக எலான் உடனடியாக 1 மில்லியன் டாலர் தொகையை நன்கொடையாக அளித்தார்.
20 மில்லியன் டாலர் இலக்கு
இந்த செய்தி பெரிய அளவில் பரவிய காரணத்தால் 6 மில்லியன் டாலரில் நின்றுப்போன நிதிதிரட்டல் எலான் மஸ்க் அறிவிப்புக்கு பின்பு 20 மில்லியன் டாலர் அளவீட்டை தொட்டது என மிஸ்டர் பீஸ்ட் ஜிம்மி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications