டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலன் மஸ்க், பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை வாஷிங்டனில் உள்ள பிளேயர் மாளிகையில் சந்தித்தார். இந்த சந்திப்பு பிரதமர் மோடியின் இரண்டு நாள் அமெரிக்க பயணத்தின் முக்கிய பகுதியாக நடைபெற்றது. எலன் மஸ்க்குடன் அவரது மூன்று குழந்தைகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது, எலன் மஸ்க் பிரதமர் மோடிக்கு ஒரு சிறப்பு பரிசை வழங்கினார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பில் இந்திய அரசின் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடனிருந்தனர்.

எலான் மஸ்க் உடன் 3 குழந்தைகளும், 2 பெண்களும் இருந்தனர். இதில் ஒரு பெண் எலான் மஸ்க்-ன் முன்னாள் கேர்ள்பிரெண்ட்-ம் நியூராலிங்க்-ன் முன்னாள் ஊழியருமான shivon zilis என தெகிறது. மேலும் 3 குழந்தைகளும் மோடியுடன் பேசி விளையாடும் போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக தொழில்நுட்பம், வணிகம் மற்றும் உலகளாவிய விண்வெளி ஒத்துழைப்பில் இந்தியாவின் வளர்ந்து வரும் ஆர்வம் போன்ற துறைகளில் இருந்தது. இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது, ஏனெனில் இது தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி துறைகளில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும்.

மோடி - எலான் மஸ்க் மத்தியிலான பேச்சுவார்த்தையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வேண்டிய ஸ்டார்லிங்க் இன்னும் நிலுவையில் உள்ள உரிமத்தின் ஒப்புதல் குறித்து கட்டாயம் விவாதிக்கப்பட்டு இருக்க கூடும்.
இதோடு வருடக்கணக்கில் பேசப்பட்டு வரும் டெஸ்லா எலக்ட்ரிக் வாகனங்கள் (EV) மீதான கட்டணக் குறைப்பு மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (ISRO) SpaceX இணைந்து பணியாற்றுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications