அமெரிக்க தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற பின்பு அனைத்து தரப்பு மக்களும் விவாதித்தது, எலான் மஸ்க்-கிற்கு என்ன லாபம் கிடைத்தது என்பது தான். இதற்கு முக்கியமான காரணம் எலான் மஸ்க் ஆரம்பம் முதல் குடியரசு கட்சியையும், டொனால்டு டிரம்ப்-க்கும் பெரிய அளவிலான ஆதரவு தெரிவித்து வந்தார்.
இதேபோல் எலான் மஸ்க் தனது டிவிட்டர் தளத்தை மொத்தமாக டொனால்டு டிரம்ப் கருத்துக்கும், கொள்கைக்கும் பிரச்சார பீரங்கியாகச் செயல்பட்டது. மேலும் இந்த தேர்தல் காலத்தில் மற்ற சமுக வலைத்தளத்தைக் காட்டிலும் டிவிட்டரில் அதிகப்படியான பயனாளர்கள் குவிந்த காரணத்தால் டிவிட்டர் தற்போது அமெரிக்க மக்கள் தினமும் பயன்படுத்தும் ஒரு தளமாக மாறியுள்ளது.

இது மட்டுமல்லாமல் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதும் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசும் போது ஒரு புதிய நட்சத்திரம் பிறந்துள்ளது, அது நம்முடைய எலான் மஸ்க் தான் என்றும் அவருடைய ஆதரவுக்குப் பெரிய நன்றி எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் எலான் மஸ்க் அமெரிக்க அரசு மூலம் லாபம் பெறப்போகும் பட்டியலில் முக்கியமானதாக இருந்தது ஸ்பேஸ்எக்ஸ். இந்த தாக்கம் டிரம்ப் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இந்தியாவில் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.
இந்தியாவில் எலான் மஸ்க் பல வருடங்களாக தனது ஸ்டார்லிங்க் சேவையை அறிமுகம் செய்ய முயற்சி செய்து வரும் வேளையில், மத்திய அரசு இன்னும் லைசென்ஸ் கூட கொடுக்காமல் காக்க வைத்து வருகிறது. இதேவேளையில் எலான் மஸ்க் தனது ஸ்டார்லிங்க் சேவை அறிமுகம் செய்ய இந்திய அரசு ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.
ஆனால் இதே செயற்கைக்கோள் வாயிலான பிராட்பேன்ட் சேவையில் அம்பானியின் ஜியோவும், சுனில் மிட்டலின் ஏர்டெல்-ம் களமிறங்கியுள்ளதால் ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டு தான் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைத்து வந்த நிலையில், மத்திய அரசு இந்த பிரச்சனையைத் தொடர்ந்து பரிசீலனையிலேயே வைத்து வருகிறது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் தான் இன்று மத்திய அரசு சாட்டிலைட் இணையச் சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் மூலம் அல்லாமல் நிர்வாக ரீதியாக வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இது எலான் மஸ்க்-கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்லிங்க் சேவையை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான பாதையை வகுத்துள்ளது.
இந்த மிகப்பெரிய முடிவு டிரம்ப் வெற்றி பெற்று 48 மணிநேரத்தில் நடந்துள்ளது கவனிக்கப்பட வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் தான் மத்திய அரசு டெஸ்லாவுக்கு இதேபோன்று வழியை விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலையை அமைக்க மத்திய அரசும் சரி, எலான் மஸ்க்-ம் சரி ஆர்வமாக தான் உள்ளனர். ஆனால் டெஸ்லா நிறுவனம் கேட்கும் வரி சலுகை தான் மத்திய அரசுக்கு பிரச்சனையாக உள்ளது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் டிரம்ப், இந்தியாவில் டெஸ்லா-வை கொண்டு வர மோடிக்கு அழுத்தம் கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேவேளையில் டிரம்ப் சீனா மீது அதிகப்படியான வரியை விதிக்க தயாராக இருக்கும் வேளையில் எலான் மஸ்க்கிற்கு மாற்று இடம் மற்றும் தனது வர்த்தக இலக்குகளை அடைய புதிய உற்பத்தி களம் கட்டாயம் வேண்டும். இவை அனைத்திற்கும் இந்தியா பதிலாக உள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications