அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று மீண்டும் அமெரிக்க அதிபர் ஆகியுள்ளார். டொனால்ட் டிரம்ப் இந்த வெற்றிக்கு பின்னணியில் இருக்கும் நபர்களில் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க்கும் ஒருவர்.
ஆரம்ப முதலே எலான் மஸ்க், டிரம்புக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார். மேலும் கோடிக்கணக்கான பணத்தை அவரது தேர்தல் பிரச்சாரத்திற்காக நன்கொடையாக வழங்கினார் எலான் மஸ்க். தொடர்ச்சியாக எக்ஸ் பக்கத்தில் டிரம்புக்கு ஆதரவாக பதிவிட்டு வந்தார்.

டிரம்புக்கு வாக்களிப்பவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை பரிசாக வழங்குவேன் என்றும், இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் எலான் மஸ்க் கூறி வந்தார். தற்போது அமெரிக்காவிலேயே டிரம்புக்கு அடுத்த படியாக மிகவும் சந்தோஷமாக இருக்கக் கூடிய நபர் எலான் மஸ்க் என கூறலாம்.
இந்த நிலையில் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவி ஏற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப் ஃப்ளோரிடா மாகாணத்தில் தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் வெற்றி உரையாற்றினார். அப்போது எலான் மஸ்கையும் குறிப்பிட்டு அவர் பேசினார்.
"இப்போது நம்மிடையே ஒரு புதிய நட்சத்திரம் இருக்கிறது, ஒரு புதிய நட்சத்திரம் பிறந்திருக்கிறது, அவர் தான் எலான் மஸ்க். அவர் ஒரு சிறந்த மனிதர், நேற்று இரவு நாங்கள் சந்தித்தோம் அவர் இரண்டு வாரம் பிலடெல்பியா மற்றும் பென்சில்வேனியா ஆகிய பகுதிகளில் தங்கி இருந்து பிரச்சாரம் செய்தார்" என டிரம்ப் குறிப்பிட்டார்.
மேலும் ஐ லவ் யூ மஸ்க் என்றும் தன்னுடைய உரையில் சுட்டிக்காட்டினார். அமெரிக்க அதிபர் தேர்தலை பொருத்தவரை தேர்தலுக்கு முந்தைய இறுதி வாரத்தில் மட்டும் எலான் மஸ்க் டிரம்பிற்காக 56 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.
இதன் மூலம் மொத்தமாக அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக டொனால்ட் ட்ரம்ப் மற்றும் குடியரசு கட்சிக்கு எலான் மாஸ்க் வழங்கிய நன்கொடையின் மொத்த மதிப்பு 132 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
நன்கொடைகள் வழங்கியது மட்டும் இல்லாமல் டொனால்ட் டிரம்ப்போடு ஒன்றாக சென்று அவருக்காக பல இடங்களில் எலான் மஸ்க் ஆதரவு திரட்டினார். அதேபோல குடியரசு கட்சிக்காகவும் பல்வேறு நகரங்களுக்கு சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னதாக ஒரு பிரச்சார மேடையில் உரையாற்றிய டிரம்ப்,தான் அதிபராக பதவியேற்றால் தன்னுடைய அரசு நிர்வாகத்தில் எலான் மஸ்க்குக்கு முக்கிய பொறுப்பு வழங்குவேன் என கூறி இருந்தார். அந்த அளவிற்கு இந்த அதிபர் தேர்தல் மற்றும் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மிகப்பெரிய நெருக்கத்தை உண்டாக்கியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications