ஹலோ டிம் குக்.. தப்பு நடந்துருச்சு.. எலான் மஸ்க் போட்ட டிவீட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகிலேயே அதிக மதிப்புடைய மற்றும் அதிக லாபம் பெற கூடிய நிறுவனமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் இருந்து எலான் மஸ்க்-ன் டிவிட்டர் செயலியை பிளாக் செய்துவிடுவதாக எவ்விதமான விளக்கமும் அளிக்காமல் தெரிவித்துள்ளதை எலான் மஸ்க் கடுமையாக விமர்சனம் செய்து.

ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் ரகசியமாக வசூலிக்கும் 30 சதவீத கட்டணம் குறித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து பெரும் விவாத பொருளாக மாற்றினார் எலான் மஸ்க். பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்த ஆப்பிள் உடனடியாக எலான் மஸ்க்-யிடம் சமாதானத்திற்கு வந்தது.

இதைத் தொடர்ந்து எலான் மஸ்க் இன்று கூலாக ஒரு டிவீட் செய்துள்ளார்.

ITR V படிவத்தை எல்லோரும் பெங்களூருக்கு அனுப்ப வேண்டுமா..? ITR V படிவத்தை எல்லோரும் பெங்களூருக்கு அனுப்ப வேண்டுமா..?

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் தலைமை அலுவலகத்தைச் சுற்றி காட்டியதற்கு மிகவும் நன்றி டிம் குக், பல விஷயங்களுக்கு மத்தியில் நாங்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து ட்விட்டர் செயலியை அகற்றப்படலாம் என்ற செய்தி குறித்த தவறான புரிதலை நாங்கள் தீர்த்துக்கொண்டோம் என டிவிட் செய்தார் எலான் மஸ்க்.

ஆப்பிள் சிஇஓ டிம் குக்

ஆப்பிள் சிஇஓ டிம் குக்

இதேபோல் ஆப்பிள் சிஇஓ டிம் குக்-ம் ஆப் ஸ்டோரில் இருந்து டிவிட்டர் செயலியை நீக்குவது குறித்து ஒரு போதும் நாங்க நினைக்கவே இல்லை என்று டிம் தெளிவுபடுத்தியுள்ளதாக எலான் மஸ்க் டிவீட் செய்துள்ளார்.

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்

எலான் மஸ்க்-கிற்கு ஆப்பிள் நிறுவனத்தையும், ஆப்பிள் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் மிகப்பெரிய ரசிகர் ஆவார். பல முறை ஸ்டீவ் ஜாப்ஸ் தான் டெக் உலகின் தனது இன்ஸ்பிரேஷன் எனக் கூறியுள்ளார்.

டெஸ்லா

டெஸ்லா

அனைத்திற்கும் மேலாக எலான் மஸ்க் பேபால் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து விட்டு வெளியேறிய நிலையில் மொத்த பணத்தையும் டெஸ்லா நிறுவனத்தில் முதலீடு செய்த நிலையில் 2013ல் டெஸ்லா நிறுவனம் பெரும் தோல்வியில் இருந்த நிலையில் நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தைத் தனது மிகவும் பிடித்த ஆப்பிள் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முயற்சி செய்தார்.

லேரி பேஜ்

லேரி பேஜ்

இது மட்டும் அல்லாமல் கூகுள் லேரி பேஜ் உடனும் எழுதப்படாத ஒப்பந்தத்தைச் செய்து வைத்திருந்தார். ஆனால் டெஸ்லா சில தடுமாற்றத்திற்குப் பின்பு தனது முதல் ரோடுஸ்டர் காரை தயாரித்துச் சாதித்து.

ப்ராஜெக்ட் டைட்டன்

ப்ராஜெக்ட் டைட்டன்

ஆனால் ஆப்பிள் டெஸ்லாவுக்குப் போட்டியாக 2014 ஆம் ஆண்டில் ஆப்பிள் கார் தயாரிக்கும் ப்ராஜெக்ட் டைட்டன் என்னும் திட்டத்தை அறிவித்துப் பெரும் தொகையை முதலீடு செய்து உற்பத்தி கூட்டணி வரையில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் ஆப்பிள் தோல்வி அடைந்து இத்திட்டத்தில் இருந்து பின்வாங்கியது பெரும் வரலாறு.

சென்சார்ஷிப் விதிகள்

சென்சார்ஷிப் விதிகள்

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டிவிட்டரை நீக்குவது குறித்துத் தகவல் வெளியான நிலையில் எலான் மஸ்க் ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் அனைத்து சென்சார்ஷிப் விதிகளையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பது குறித்து ஒரு வாக்கெடுப்பு டிவிட்டரில் நடத்தப்பட்டது.

விளம்பரம்

விளம்பரம்

டிவிட்டர் தளத்தில் விளம்பரம் செய்வதை ஆப்பிள் நிறுத்தியுள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் டிவிட்டர் தளத்தில் வருடத்திற்குச் சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான விளம்பரத்தைச் செய்யும் நிலையில், இது பெரும் இழப்பாக டிவிட்டருக்கு உள்ளது என எலான் மஸ்க் புலம்பினார்.

30 சதவீதம் வரி

30 சதவீதம் வரி

எலான் மஸ்க் ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் செய்யப்பட்டும் ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் 30 சதவீதம் வரி அல்லது கட்டணத்தை வசூலிப்பது குறித்து ரகசியமாக வைத்துள்ளது குறித்துக் கடுமையாக விமர்சனம் செய்தார்.

டிம் குக்

இந்தப் பிரச்சனை பெரியதாக வெடிக்கும் முன்பு டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் பிராண்ட் வேல்யூ பாதிக்கக் கூடாது என்பதற்காக எலான் மஸ்க்-ஐ நேரில் சந்தித்துப் பேசி பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Elon Musk good terms with tim cook; posts video from Apple HQ misunderstanding resolved

Elon Musk good terms with tim cook; posts video from Apple HQ misunderstanding resolved
Story first published: Thursday, December 1, 2022, 21:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X