உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் ஓரே நாளில் 33.8 பில்லியன் டாலர் அளவிலான தொகையைச் சம்பாதித்து உள்ளார்.
எலான் மஸ்க் தலைமையில் தற்போது டெஸ்லா நிறுவனம் மட்டும் அல்லாமல் ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க், போரிங் கம்பெனி, சோலார் சிட்டி, ஸ்டார்லிங்க் எனப் பல நிறுவனங்களும் வர்த்தகப் பிரிவுகளும் உள்ளது.
ஒவ்வொரு நிறுவனம் இதுவரை உலகில் இல்லாத ஒரு சேவை அல்லது வர்த்தகத்தை உருவாக்கி வருகிறது.
டெஸ்லா நிறுவனம்
இந்த நிறுவனங்களில் டெஸ்லா நிறுவனம் மட்டுமே பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளதால் குறிப்பிட்டு உள்ள ஒவ்வொரு நிறுவனத்தின் வளர்ச்சியும் டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் டெஸ்லா நிறுவனத்திற்கு எப்போதும் தனி மதிப்பு உள்ளது.
அமெரிக்கச் சந்தை முதலீட்டாளர்கள்
2022ஆம் ஆண்டின் முதல் நாள் வர்த்தகத்தில் அமெரிக்கச் சந்தை முதலீட்டாளர்கள் டாப் டெக் நிறுவனங்கள் பார்சூன் 500 நிறுவனத்தில் முதலீடு செய்து வர்த்தகத்தைத் துவங்கினர். இதனால் அமெரிக்கச் சந்தையில் இருக்கும் அனைத்து முன்னணி நிறுவனங்களும் 2022ஆம் ஆண்டின் முதல் வர்த்தக நாளில் அதிகப்படியான முதலீட்டைப் பெற்ற சிறப்பான உயர்வை பதிவு செய்துள்ளது.
33.8 பில்லியன் டாலர்
இந்தச் சூழ்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் மீதும் அதிகப்படியான முதலீடுகள் குவிந்த காரணத்தால் டெஸ்லா பங்குகள் ஓரே நாளில் 13.5 சதவீதம் அதிகரித்து 1199.78 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் டெஸ்லா பங்குகளை அதிகளவில் வைத்திருக்கும் எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு ஒரே நாளில் 7 மணிநேர வர்த்தகத்தில் 33.8 பில்லியன் டாலர் அதிகரித்து மொத்த சொத்து மதிப்பு 304.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
எலான் மஸ்க்
2021ஆம் ஆண்டின் எலான் மஸ்க் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான பங்குகளை விற்பனை செய்த நிலையில் முதலீட்டாளர்கள் வருத்தம் தெரிவித்த நிலையில், நேற்று காலாண்டு முடிவுகள், உற்பத்தி ஏற்பட்ட உயர்வு ஆகியவற்றைக் காரணம் காட்டி அதிகப்படியான முதலீடு செய்ததில் எலான் மஸ்க் சுமார் 33.8 பில்லியன் டாலர் சம்பாதித்து உள்ளார். ஆதாவது ஒரு வருடம் விற்பனை செய்தப் பங்குகளின் மதிப்பை வெறும் 7 மணி நேரத்தில் நேற்று சம்பாதித்துள்ளார்.


Click it and Unblock the Notifications