உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸின் உரிமையாளர், எக்ஸ் தளத்தையும் வைத்துள்ளார். டெஸ்லா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தை வைத்திருக்கும் எலான் மஸ்க் மிகப் பெரிய கார் கலெக்ஷனை வைத்துள்ளார். அதில் விதவிதமான டெஸ்லா கார்கள் உள்ளன.
டெஸ்லா கார்களில் சர்ச்சைக்குரிய டிசைன் கொண்ட சைபர் டிரக் மாடல் காரை தனது குடும்பக்காராகவும், தினசரி பயன்படுத்தும் காராக எலான் மஸ்க் பயன்படுத்தி வருகிறார். இது தவிர டெஸ்லா மாடல் எஸ் பெர்பார்மன்ஸ் காரையும் வைத்துள்ளார். எலக்ட்ரிக் கார் உலகில் இது மிக தனித்துவமான கார் ஆகும்.

டெஸ்லா மாடல் எஸ் கார் 2.5 நொடிகளில் மணிக்கு ஜீரோவிலிருந்து 100 கி.மீ. வேகத்தில் செல்லும். இதில் 5 பேர் சொகுசாக சவாரி செய்யலாம். எலான் மஸ்க்கிடம் உள்ள கார் பட்டியல் பற்றி இனி பார்க்கலாம்.
அவரது பட்டியலில் முதல் கார் 1967 ஜாகுவார் இ டைப் ரோடுஸ்டர் ஆகும். அந்த காருக்கு, கார் பிரியர்களிடம் இப்போதும் மவுசு உள்ளது. என்ஸோ பெராரி கூட இந்த இ டைப் கார் உலகின் மிக அழகான கார் என்று வருணித்துள்ளார். இ டைப் கார் வாங்கவேண்டும் என்பது எலான் மஸ்க்கின் சிறுவயது கனவாகும். அந்த காரை வாங்கும் நிலைக்கு அவர் வந்தபோது மஸ்க் வாங்கினார்.
அடுத்ததாக மெக்லாரென் எஃப் 1. இந்தக் கார் இப்போதும் இயற்கையாக ஆசையைத் தூண்டும் காராக உள்ளது. இதன் தயாரிப்பாளர் கார்டன் முர்ரே இந்த 3 சீட்டர் கார் லேஅவுட்டை 1969இல் இருந்து படைத்து வருகிறார். இறுதியாக எஃப் 1 கார் தயாரிப்பு தொடங்கியது. மெக்லாரென் எஃப் 1 காரை வாங்கிய மஸ்க் அதை மிக வேகமாக ஓட்டிச் சென்றபோது விபத்து ஏற்பட்டு கார் அப்பளமாக நொறுங்கியது. இருப்பினும் அதை ஏகப்பட்ட செலவில் ரிப்பேர் செய்து பின்னர் விற்றுவிட்டார்.
1976 லோட்டஸ் இ ஸ்பிரிட் - வெட் நெல்லியைப் போல வேறு எந்த லோட்டஸ் இ ஸ்பிரிட் கார் பிரபலமானதாக இருக்கவில்லை. தி ஸ்பை ஹூ லவ்டு மீ படத்தில் ஜேம்ஸ்பாண்டு இந்த காரை பயன்படுத்தியிருப்பார். அந்தப் படத்தில் லோட்டஸ் இ ஸ்பிரிட் ஒரு நீர்மூழ்கிக் கப்பலாக மாறும். ரசிகர்களை அந்தக் காட்சி மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. 2013இல் நடந்த ஒரு ஏலத்தில் இந்தக் காரை எலான் மஸ்க் வாங்கினார்.
பிஎம்டபிள்யூ எம்-5 - மஸ்க்கின் கார் கலெக்ஷனில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய மற்றொரு கார் இந்த பிஎம்டபிள்யூ எம்5. ஹாமாண் மோட்டார் ஸ்போர்ட் நிறுவனத்தில் இந்தக் கார் டியூன் செய்யப்பட்டது. 600 ஹார்ஸ்பவர் திறன் உள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 200 முதல் 322 கி.மீ.. வேகத்தில் செல்லக் கூடியது.
டெஸ்லா ரோடுஸ்டர் - டெஸ்லாவில் உருவாக்கப்பட்ட முதல் கார் இந்த டெஸ்லா ரோடுஸ்டர். லோட்டர் எலைஸ் வடிவில் இந்தக் கார் தயாரிக்கப்பட்டது. 2.5 ஸ்போர்ட் காரான இது 2018இல் வெளிச்சத்துக்கு வந்தது.
Story written by: Jayachandran
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications