அமெரிக்கா: உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் எலன் மஸ்க் தன்னுடைய பாதுகாப்பிற்கு செலவிடும் தொகையை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. 240 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்போடு உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்து வருகிறார் எலன் மஸ்க்.இவர் கூடிய விரைவில் உலகின் முதல் ட்ரிலின்னியராக மாறக்கூடும் என அண்மையில் ஒரு தகவல் வெளியானது.
இதனிடையே எலன் மஸ்க் தன்னுடைய பாதுகாப்பினை அதிகப்படுத்தி இருப்பதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக டெஸ்லா நிறுவனத்தின் ஆவணங்களை நியூயார்க் டைம்ஸ் ஆய்வு செய்துள்ளது.

இதன்படி எலன் மஸ்க் பாதுகாப்புக்காக செலவிடும் தொகையை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. இதற்கு முன்பு தன்னுடைய பாதுகாப்புக்கு பெரியதளவில் முக்கியத்துவம் வழங்காமல் இருந்த மஸ்க் கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய பாதுகாப்பை அதிகரித்து வருவதாக இந்த செய்தி கூறுகிறது.
இதற்கு முன்பு எலன் மஸ்க் இரண்டு பாதுகாவலர்களுடன் மட்டுமே பயணங்களை மேற்கொள்வார். ஆனால் தற்போது 20 பாதுகாவலர்கள் எலன் மஸ்குடன் பயணம் செய்கின்றனர். இவர்கள் அனைவரும் மிகத்தீவரமான பயிற்சி பெற்ற நல்ல உடல்வாகு கொண்ட பாதுகாவலர்கள் .
அவ்வப்போது துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் வைத்திருப்பார்களாம். ஒரு மருத்துவ நிபுணரும் எலன் மஸ்க்குடன் எப்பொழுதும் பயணம் செய்கிறாராம். மஸ்க் தன்னுடைய பாதுகாப்பு குழுவினருக்கு வாயேஜர் என ஒரு ரகசிய பெயரை வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த குழு ஒரு சிறிய உளவு அமைப்பை போல செயல்படுகிறது.
எலன் மஸ்கிற்கு மிரட்டல் விடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே தான் அவர் தனக்கான பாதுகாப்பை அதிகப்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. முன்பெல்லாம் வெளி நிகழ்ச்சிகளில் செல்லும்போது மக்களுடன் சாதாரணமாக சென்று உரையாடி வந்த மஸ்க் தற்போது அவற்றை பெருமளவில் தவிர்த்து வருகிறார் .
நியூயார்க் டைம்ஸ் செய்தி அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு எலன் மஸ்க் தன்னுடைய பாதுகாப்பிற்காக 2.4 மில்லியன் டாலர்களை செலவு செய்து வந்த நிலையில் நடப்பு 2024 ஆம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களிலேயே கூடுதலாக 5 லட்சம் டாலர்களை அவர் ஒதுக்கி இருக்கிறார்.
இவர் சராசரியாக மாதத்திற்கு 1,45,000 டாலர்களை பாதுகாப்பிற்காக மட்டுமே செலவு செய்கிறாராம். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் அவருடைய தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஆண்டுக்கு 8,20,000 டாலர்களை செலவு செய்கிறார். அமேசானின் ஜெப் பெசோஸ் 1.6 மில்லியன் டாலர்களையும், மெட்டா நிறுவனத்தின் மார்க் ஸக்கர்பர்க் ஆண்டுக்கு 23.4 மில்லியன் டாலர்களையும் தங்களுடைய தனிப்பட்ட பாதுகாப்புக்காக செலவிடுகின்றனர்.
Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications