எலான் மஸ்க் சம்பவம்.. 14 வயது சிறுவனுக்கு பல கோடி சம்பளத்தில் வேலை.. யார் இந்த சிறுவன்..?

உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு வந்த எலான் மஸ்க் சொத்து மதிப்பு 226 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

சமீபத்தில் எலான் மஸ்க்-ன் சீனா பயணம், பல்வேறு முக்கிய சந்திப்பு, டெஸ்லா ரோபோ-வின் வீடியோ, செயற்கை நுண்ணறிவு துறையில் புதிய நிறுவன துவக்கம் என பல முக்கியமான அறிவிப்புகள வெளியானதற்கு மத்தியில் 14 வயது சிறுவனுக்கு வேலை கொடுத்த சம்பவம் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

எலான் மஸ்க் சம்பவம்.. 14 வயது சிறுவனுக்கு பல கோடி சம்பளத்தில் வேலை.. யார் இந்த சிறுவன்..?

பொதுவாக எலான் மஸ்க் உடன் பணியாற்றுவது சாதாரண விஷயமில்லை, மிகவும் கடுமையாக இருக்கும் என பலரும் கதறியிருப்பதை பார்த்திருப்போம்.

இதேபோல் எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் அல்லது தனது முக்கிய அணியில் ஒருவர் சேர வேண்டுமெனில் மிகவும் வித்தியாசமான இன்டர்வியூவ்-ஐ எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த சூழ்நிலைக்கு மத்தியில் எலான் மஸ்க் ஒரு 14 வயது சிறுவனுக்கு வேலை கொடுத்துள்ளார் என்றால் வியக்க வைக்கும் விஷயமாகவே உள்ளது.

Kairan Quazi என்ற 14 வயது சிறுவனம் அடுத்த சில மாதத்தில் அமெரிக்காவின் Santa Clara University's School of Engineering கல்லூரியில் இருந்து பட்டம் பெற உள்ள நிலையில் எலான் மஸ்க் கட்டுப்பாட்டில் இயங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் கடுமையான டெக்னிக்கல் இன்டர்வியூவ்-ஐ கிளையர் செய்து விரைவில் Starlink நிறுவன பணியில் சேர உள்ளார்.

இதுக்குறித்து Kairan Quazi தனது லின்கிடுஇன் கணக்கில், என்னுடைய அடுத்த ஸ்டாப்: SpaceX, உலகிலேயே மிகவும் சிறப்பான நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக இணைந்து Starlink engineering டீம் உடன் பணியாற்ற உள்ளேன். உலகில் மிகவும் அரிதாக SpaceX என்னுடைய வயதை பொருட்படுத்தாமல் திறமையை ஆய்வு செய்து பணியில் சேர்த்துள்ளது என பதிவிட்டு உள்ளார்.

கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்ற கையோடு தனது தாயுடன் வாஷிங்டன்-க்கு சென்று பணியாற்ற உள்ளதாகவும் Kairan Quazi தெரிவித்துள்ளார். 14 வயதான Kairan Quazi-ன் IQ அளவு 99.9 சதவீத மக்களின் சராசரி அளவை காட்டிலும் அதிகம், அதாவது உலகில் மிகவும் அரிதான 0.01 சதவீத மக்களில் ஒருவராக உள்ளான் இந்த 14 வயது சிறுவன்.

Kairan Quazi 10 வயதில் Intel நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி பிரிவில் co-op fellow ஆக இன்டர்ன்ஷிப் பெற்றார், அதை தொடர்ந்து 11 வயதில் Santa Clara University கம்ப்யூட்டர் சையின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் படிக்க சேர்ந்தார். இதை தொடர்ந்து 14 வயதில் பட்டம் பெற்று தற்போது எலான் மஸ்க்-ன் மிக முக்கியமான கருத்து ஸ்டார்லிங்க் நிறுவனத்தில் பணியாற்ற உள்ளார்.

எலான் மஸ்க் சம்பவம்.. 14 வயது சிறுவனுக்கு பல கோடி சம்பளத்தில் வேலை.. யார் இந்த சிறுவன்..?

நீங்கள் ஆங்கில வெப் சீரியஸ் பார்ப்பவராக இருந்தால் young sheldon என்ற பிரபலமான தொடர் உங்களுக்கு தெரிந்திருக்கும். இதில் எலான் மஸ்க் ஒரு சீனில் நடித்திருப்பார், அந்த சீனில் 11 வயதான sheldon எழுதிய ராக்கெட் குறித்த நோட்டை படிப்பார். இதில் இருந்து தான் மீண்டும் பயன்படுத்த கூடிய ராக்கெட் உருவாக்கப்பட்டதாக இதில் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.

கிட்டத்தட்ட இதேபோன்ற நிகழ்வு தான் தற்போது நிஜத்தில் நடந்துள்ளது, ஒரு 14 வயது சிறுவனின் திறமையை கண்டு வியந்த எலான் மஸ்க்-ன் SpaceX நிர்வாகம் பல கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கொடுத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+