உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை தக்க வைத்திருக்கும் எலான் மஸ்க் சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்று வரும் வேளையில், உலகின் முதல் 'டிரில்லியனேர்' ஆகும் வாய்ப்பும் இருப்பதாக சர்வதேச நிதி வட்டாரங்கள் கணிக்கின்றன.
Forbes பில்லியனேர்ஸ் பட்டியலின்படி, xAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 849.3 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

'கையில் பணமில்லை' - எலான் மஸ்கின் விளக்கம்
மஸ்கின் செல்வம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வந்த நிலையில், அவர் தானே இதற்கு விளக்கம் அளித்துள்ளார். தனது சமூக வலைதளமான X-இல் வெளியிட்ட பதிவில், "எனது 'நெட் வொர்த்' முழுவதும் வங்கி கணக்கில் இருக்கும் பணம் அல்ல. அது பெரும்பாலும் நான் வைத்திருக்கும் பங்கு உரிமைகளின் மதிப்பு. என்னுடைய மொத்த சொத்து மதிப்பில் 0.1%க்கும் குறைவான அளவுக்கு தான் ரொக்க பணம் உள்ளது," என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் உலகின் பெரும் பணக்காரர்களாக இருப்போரின் சொத்து மதிப்பில் மில்லியன், பில்லியன் என கூறப்படும் செல்வம் என்பது பெரும்பாலும் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பை அடிப்படையாகக் கொண்ட கணக்கீடு தான். அது நேரடியாக கையில் இருக்கும் பணம் அல்ல. அம்பானிக்கும், அதானிக்கும் கூட இதே தான்.
டெஸ்லா - ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள்
எலான் மஸ்கின் சொத்து மதி0ப்பில் மிகப்பெரிய பங்கு Tesla மற்றும் SpaceX ஆகிய நிறுவனங்களின் பங்குகளே. இந்த நிறுவனங்களில் அவர் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு உயர்ந்தால், அவரது மொத்த செல்வமும் அதிகரிக்கிறது. சந்தை சரிந்தால், அதே வேகத்தில் அவரது சொத்து மதிப்பும் குறையும்.
அதாவது, Tesla மற்றும் SpaceX பங்கு மதிப்பீட்டின் அடிப்படையில் அவரது 'நெட் வொர்த்' கணக்கிடப்படுகிறது. இது நிலையான தொகை அல்ல; சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்.

எலான் மஸ்க் அளிக்கப்பட்டு உள்ளது போல், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன ஊழியர்களுக்கும் அந்த நிறுவன பங்குகள் மற்றும் பங்கு விருப்பங்கள் (stock options) வழங்கப்பட்டுள்ளன. மேலும், டெஸ்லாவின் பங்குகளில் அதிகளவு தனிநபர் முதலீட்டாளர்கள், ஓய்வூதிய நிதிகள் மற்றும் பண்ட் ஹவுஸ் என பொது சந்தை முதலீட்டாளர்கள் கையில் உள்ளது.
'நெட் வொர்த்' என்றால் என்ன?
பொதுவாக 'நெட் வொர்த்' என்பது ஒருவரின் மொத்த சொத்து (பங்கு, நிலம், முதலீடு) மதிப்பில் கடன்களை நீக்கிய பிறகு மீதமுள்ள மதிப்பைக் குறிக்கும் அளவீடு. பெரிய தொழிலதிபர்களின் செல்வம் பெரும்பாலும் பங்கு மதிப்பீட்டின் மீது தான் தங்கியிருக்கிறது.
அதனால், "849.3 பில்லியன் டாலர்" என்ற எண் கேட்டவுடன் அது முழுவதும் பணமாக வைத்திருக்கிறார் என நினைப்பது தவறு. இது பங்கு சந்தை மதிப்பீட்டின் பிரதிபலிப்பு மட்டுமே.
டிரில்லியனேர் கனவு நிஜமாவா?
எலான் மஸ்கின் நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்தால், அவர் உலகின் முதல் டிரில்லியனேர் ஆகும் வாய்ப்பு இருப்பதாக நிதி நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் அதே நேரத்தில், பங்கு சந்தை ஏற்ற இறக்கங்கள் இந்த கணக்கீட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications