இந்திய விண்வெளி துறையில் 100 சதவீதம் வரையிலான அந்நிய நேரடி முதலீட்டை (FDI) மூன்று வழிகளில் அனுமதிக்க மத்திய நிதியமைச்சகம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நிதி அமைச்சகம் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த திருத்தப்பட்ட விதிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
மத்திய நிதியமைச்சகம் இந்த முடிவைச் செயல்படுத்த முக்கியமான காரணம் எலான் மஸ்க்-ன் இந்தியப் பயணம். எலான் மஸ்க் இந்தியாவுக்கு வருவதற்கும், அன்னிய முதலீட்டு விதிகளில் தளர்வு அளிக்கவும் என்ன தொடர்பு..?

ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் நிதியமைச்சகம் இந்த திருத்தப்பட்ட விதிகளை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வான எலான் மஸ்க் அடுத்த வார தொடக்கத்தில் இந்தியாவுக்கு வரவுள்ளார். இந்த பயணத்தில் எலான் மஸ்க் விண்வெளி துறையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனர்களைச் சந்திப்பது, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் திட்டத்தின் அறிமுகம், எலக்ட்ரிக் வாகன (EV) முதலீட்டுத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் திட்டம், செயற்கைக்கோள்கள் மூலம் அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. தற்போது தளர்வு அளிக்கப்பட்டு உள்ள அன்னிய முதலீட்டு விதிகள் மூலம் இந்தியாவில் ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்லிங்க் திட்டத்தைக் கூட்டணி இல்லாமல் 100 சதவீதம் தன்னுடைய சொந்த முதலீட்டின் வாயிலாக இயக்க முடியும்.
இந்திய விண்வெளித் துறை முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்த அந்நிய முதலீட்டுக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் வகையில், மத்திய நிகி அமைச்சகம் பிப்ரவரியில் விண்வெளித் துறைக்கான அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், குறிப்பிட்ட பிரிவுகளில் 100 சதவீதம் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் இந்தியாவுக்கு வருகை தர இருப்பதால், இந்த புதிய விதிமுறைகளும், அதை ஏப்ரல் 16 ஆம் தேதி நடைமுறைப்படுத்தியது முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது.
இந்த புதிய கொள்கை மாற்றம், இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சியில் ஒரு மைல் கல் ஆக இருக்கும் என்று இத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, விண்வெளி துறையில் செயற்கைக்கோள்கள், செயற்கைக்கோள் தரவு தயாரிப்புகள், நிலத்தளம் (ground segment) மற்றும் பயனர் தளம் (user segment) ஆகிய துறைகளில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு (FDI) அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதில், 74 சதவீதம் வரையிலான முதலீட்டுக்கு மட்டுமே ஆட்டோமேட்டிங் முறையின் கீழ் அனுமதிக்கப்படும், 74 சதவீதத்திற்கும் அதிகமான முதலீடுகளுக்கு அரசின் ஒப்புதல் தேவைப்படும். முந்தைய கொள்கையின்படி, செயற்கைக்கோள்களை உற்பத்தி செய்து இயக்குவதில் அந்நிய முதலீடுகள் அனைத்தும் அரசின் ஒப்புதலுடன் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
ஏவுகணை ஏவுதல் வாகனங்கள் (launch vehicles) மற்றும் அவற்றைச் சார்ந்த அமைப்புகள் அல்லது துணை அமைப்புகள், மற்றும் விண்கலங்களை விண்ணில் ஏவி அதை திரும்பப் பெறும் ஸ்பேஸ்போர்ட்ஸ் உருவாக்குதல் 49 சதவீதம் வரை ஆட்டோமேட்டிங் முறையின் கீழ் அன்னிய முதலீடுகள் அனுமதிக்கப்படும். அதற்கு மேல் அரசின் ஒப்புதல் தேவை.
செயற்கைக்கோள்கள், நிலத்தளம் (ground segment) மற்றும் பயனர் தளம் (user segment) ஆகியவற்றிற்கான உதிரிப்பாகங்கள் மற்றும் அமைப்புகள் அல்லது துணை அமைப்புகளை உற்பத்தி செய்வதில் 100 சதவீதம் ஆட்டோமேட்டிக் முறையில் அனுமதி வழங்கப்படுகிறது.
இதேபோல் இந்திய விண்வெளி துறையில் முதலீடு செய்யும் நிறுவனம் அவ்வப்போது விண்வெளித் துறையால் வெளியிடப்படும் துறைசார் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்ட இருக்க வேண்டும் என்றும் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் இப்புதிய விதிகள் ஏப்ரல் 16 முதல் அமலுக்கு வந்துள்ளன.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications