எலான் மஸ்க், உலகை புரட்டிப்போடும் பல தொழில்நுட்பத்தையும், நிறுவனத்தையும் உருவாக்கி வாழும் ஐன்ஸ்டீன் என்றும் பலரால் பாராட்டப்படும் நிலையில், அவருடைய பர்சனல் வாழ்க்கை ஆரம்பம் முதல் மோசமானதாகவே இருந்து வருகிறது.
ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்து விவாகரத்து ஆன நிலையில், 3 வருடமாக க்ரைம்ஸ் உடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த நிலையில் 2021ல் க்ரைம்ஸ்-ஐ பிரேக்அப் செய்த 50 வயதான எலான் மஸ்க் தற்போது 27 வயதான நடாஷா பாசெட்-ஐ டேட்டிங் செய்து வருகிறார்.
யார் இந்த நடாஷா பாசெட் என்பது தான் தற்போது அனைவரின் முக்கியக் கேள்வியாக உள்ளது.
எலான் மஸ்க்
உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், க்ரைம்ஸ் உடன் பிரேகப் செய்த நிலையில் புதியதாக ஒரு பெண்ணை டேட்டிங் செய்யத் துவங்கியுள்ளார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் என்னும் மாபெரும் நிறுவனத்தின் சிஇஓ-வான எலான் மஸ்க் இப்போது 27 வயதான ஆஸ்திரேலியா நடிகை நடாஷா பாசெட்-ஐ டேட்டிங் செய்து வருகிறார்.
நடாஷா பாசெட்
சமீபத்தில் நடாஷா பாசெட், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் எலான் மஸ்க்-ன் பிரைவேட் ஜெட் விமானத்தில் இருந்து வெளியே வந்தது, கடந்த சில வாரங்களில் அமெரிக்காவில் பல இடத்தில் நடாஷா பாசெட் - எலான் மஸ்க் ஒன்றாகத் தென்பட்டது குறிப்பிடத்தக்கது.
233 பில்லியன் டாலர்
இந்த இளம் மாடல் மற்றும் நடிகையான நடாஷா பாசெட் எலான் மஸ்க்-ன் பிரமிக்க வைக்கும் மூளைக்குத் தான் விழுந்ததாகவும், அவருடை பணத்திற்காக அல்ல என்று கூறியதாகத் தெரிகிறது. இன்றைய நிலையில் எலான் மஸ்க் சுமார் 233 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார்.
மனைவி
எலான் மஸ்க் தனது முதல் மனைவியான எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன் உடன் ஐந்து மகன்கள் கொண்டு உள்ளார். ஜஸ்டின் வில்சன்-ஐ விவாகரத்து செய்த பின்பு பிரிட்டிஷ் நடிகை தலுலா ரிலே-வை இரண்டு முறை திருமணம் செய்து இரண்டு முறை விவாகரத்துச் செய்தார்.
கேர்ள் பிரண்ட்
செப்டம்பர் 2021 இல் பாடகரான க்ரைம்ஸ் இடமிருந்து மஸ்க் பிரேக்அப் செய்தார். இவருக்கும் X AE A-Xii என்ற ஒரு வயது மகன் உள்ளார். எலான் மஸ்க்-கிற்கு மொத்தம் 7 மகன்கள் அதில் ஒரு குழந்தை இறந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications