200 பில்லியன் டாலர் சொத்து எங்கே..ஜெப் பெசோஸ்-ஐ தொடர்ந்து எலான் மஸ்க்..!

மார்டன் தொழில் உலகில் 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு தான் மிகப்பெரிய விஷயம் என்று அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கையில் கடந்த 5 வருடத்தில் சத்தமே இல்லாமல் இருவர் 200 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உயர்ந்து வியக்க வைத்தனர்.

ஆனால் 2022ல் இது அனைத்தும் உடைந்து 200 பில்லியன் டாலர் பட்டியல் காலியாகி யாருமே இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

ஜெப் பெசோஸ்

ஜெப் பெசோஸ்

கொரோனா காலக்கட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் எண்டர்டெயின்மென்ட் என ஆன்லைன் சேவைப்பக்கம் திரும்பியதால் ஜெப் பெசோஸ் குறுகிய காலக்கட்டத்தல் 200 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு அளவீட்டை அடைந்தார்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

இதேவேளையில் டெஸ்லா பங்குகள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது மூலம் எலான் மஸ்க் 219 பில்லியன் டாலர் வரையிலான சொத்து மதிப்பை கொண்டு கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்கு 200 பில்லியன் டாலர் கிளப்-ல் தனி ஆளாக இருந்தார்.

டிவிட்டர்

டிவிட்டர்

ஆனால் டிவிட்டர் கைப்பற்றும் முயற்சியை எலான் மஸ்க் துவங்கிய நாளில் இருந்து இவருடைய சொத்து மதிப்பு தொடர்ந்து சரிய துவங்கியது, இதனால் தற்போது வெறும் 146.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை LVMH நிறுவனத்தின் தலைவர் அர்னால்ட் பெர்னால்ட்-யிடம் இழந்தார்.

டெஸ்லா பங்குகள்

டெஸ்லா பங்குகள்

2022 ஆம் ஆண்டில் மட்டும் டெஸ்லா பங்குகள் சுமார் 69.20 சதவீதம் வரையில் சரிந்து வெறும் 123.18 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வருடம் மட்டும் சுமார் 276.75 டாலர் வரையில் டெஸ்லா பங்குகள் சரிந்துள்ளது.

52 வார உயர்வு

52 வார உயர்வு

டெஸ்லா நிறுவன பங்குகளின் 52 வார உயர்வின் அளவு 402.67 டாலராகும். உலகின் 2வது பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் 2022 ஆம் ஆண்டில் 44 பில்லியன் டாலர் முதலீடு செய்து டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதன் மூலம் இவரின் கட்டுப்பாட்டில் சுமார் 6 நிறுவனங்கள் தற்போது உள்ளன.

எலான் மஸ்க் - டிவிட்டர்

எலான் மஸ்க் - டிவிட்டர்

டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றியதில் இருந்து பல அதிரடி மாற்றங்கள், கட்டுப்பாடுகள் மூலம் வர்த்தகத்தை மறுசீரமைப்புச் செய்வது மட்டும் அல்லாமல் விரைவில் லாபகரமான நிறுவனமாக மாறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் எலான் மஸ்க் substack என்னும் நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

6 நிறுவனங்கள்

6 நிறுவனங்கள்

எலான் மஸ்க் கட்டுப்பாட்டின் கீழ் தற்போது Tesla, SpaceX, The Boring Company, Neuralink, Twitter மற்றும் OpenAI எனக் கிட்டத்தட்ட 6 நிறுவனங்கள் உள்ளன. இதில் எலான் மஸ்க் SpaceX இன் நிறுவனர், CEO மற்றும் தலைமை பொறியாளர், டெஸ்லா-வில் CEO மற்றும் ப்ராடெக்ட் ஆராகிடெக்ட், டிவிட்டரின் உரிமையாளர் மற்றும் CEO, The Boring Company இன் நிறுவனர், Neuralink மற்றும் OpenAI இன் இணை நிறுவனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+