டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றுவதில் எலான் மஸ்க் மிகவும் பிசியாக இருப்பார் என அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், புதிதாக ஒரு பர்பியூம்-ஐ தனது போரிங் நிறுவனத்தின் கீழ் அறிமுகம் செய்துள்ளார்.
எலான் மஸ்க் தொடர்ந்து பிரபலமாக இருக்க அவ்வப்போது வித்தியாசமான, மக்களால் அதிகம் விரும்பப்படும் பொருட்களை அறிமுகம் செய்து தனது வாடிக்கையாளர்களையும், பாலோவர்களையும் மிகவும் ஆக்டிவாக வைத்துக்கொண்டு வருகிறார்.
இதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனமாகவே மாறியுள்ளது டனல் நிறுவனமான போரிங் கம்பெனி. இப்புதிய பர்பியூம்-க்காகத் தனி இணையப் பக்கத்தைப் போரிங் கம்பெனி இணையதளத்தில் உருவாக்கி உள்ளது.
எலான் மஸ்க்
எலான் மஸ்க் செப்டம்பர் மாதம் போரிங் கம்பெனி விரைவில் ஆண்களுக்கான ஒரு சென்ட் அறிமுகம் செய்ய உள்ளது. இது சந்தையில் இருக்கும் பிற பிராண்டுகளின் பர்பியூம் காட்டிலும் வித்தியாசமாக இருக்கும் என்பதால் கூட்டத்தில் நீங்கள் தனியாகத் தெரியலாம் என டிவிட்டரில் பதிவிட்டு, தான் அதிகாரப்பூர்வமாகப் பர்பியூம் வர்த்தகத்தில் நுழைவதை அறிவித்தார்.
Burnt Hair பர்பியூம்
இதைத் தொடர்ந்து எலான் மஸ்க் அக்டோபர் 9 ஆம் தேதி புதிய பர்பியூம் பெயரை Burnt Hair என்றும் அதன் பாட்டில் வடிவம், நிறம் ஆகியவற்றின் புகைப்படத்தை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து போரிங் இணையதளத்தில் நேற்று விற்பனைக்கு வந்தது Burnt Hair பர்பியூம்.
ப்ரீமியம் விலை
எலான் மஸ்க் மீதும், அவர் நிறுவனத்தின் தயாரிப்புகள் மீதும் மக்களுக்கு அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் காரணத்தால் Burnt Hair பர்பியூம் ப்ரீமியம் விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளது.
100 டாலர்
பொதுவாக அமெரிக்காவில் பர்பியூம்-களுக்கு மிகப்பெரிய மார்கெட் இருக்கும் நிலையில் எலான் மஸ்க் இந்த Burnt Hair பர்பியூம்-ஐ 100 டாலருக்கு விற்பனை செய்யப் பட்டியலிட்டார். சில மணிநேரத்திலேயே 10000 பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்தார் எலான் மஸ்க்.
போரிங் கம்பெனி
எலான் மஸ்க் இதுப்போன்று பல பொருட்களைத் தனது போரிங் கம்பெனி மூலம் அறிமுகம் செய்துள்ளார், இதில் அனைத்தும் collectibles பாதுகாத்து வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடியதாகும்.
flamethrower, Tequila விற்பனை
இப்படிப் போரிங் கம்பெனி-க்கு 10 மில்லியன் டாலர் நிதி திரட்டுவதற்காக 2018ல் 20000 flamethrower-களை விற்பனை செய்தது, இதேபோல் முதலீட்டாளர்களைக் கிண்டல் செய்யும் வகையில் டெஸ்லா பிராண்டில் Tequila அறிமுகம் செய்தார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications