உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க், இந்த மிட்டேர்ம் தேர்தலில் குடியரசு கட்சி வெற்றி பெற வேண்டுமென சுமார் 450 மில்லியன் டாலர் விளம்பரத்திற்காகவும், பிரச்சாரத்திற்காகவும், தேர்தலுக்காகவும் செலவு செய்துள்ளார். இதில் 205 மில்லியன் டாலர் தொகை டெக்சாஸ்க்கு மட்டுமே செலவு செய்துள்ளார்.
ஆனால் நடந்தது என்ன தெரியுமா செனட் தேர்தலில் James Talarico-வும், கவர்னர் தேர்தலில் Gina Hinojosa ஆகிய இரண்டிலும் ஜனநாயக கட்சி வெற்றி பெற்று 30 வருட வரலாற்றை மாற்றியுள்ளது.

டெக்சாஸ் தேர்தல் முடிவுகள் வெளியான உடனே எலான் மஸ்க்-ன் டெஸ்லா பங்குகள் 2.4 சதவீதமும், ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் சுமார் 5 சதவீதம் சரிந்தது மூலம் இரு நிறுவனங்களும் நேற்று ஒரு நாள் வர்த்தகத்தில் 120 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை இழந்துள்ளது. இதேபோல் எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு 42 பில்லியன் டாலர் சரிந்து மொத்த சொத்து மதிப்பு 868.8 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
எலான் மஸ்க் தன்னுடைய அனைத்து நிறுவனத்தின் தலைமையகத்தையும் தற்போது டெக்சாஸ் ஆக மாறியிருக்கும் வேளையில் இம்மாநிலத்தில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளது இவருடைய சாம்ராஜ்ஜியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டு உள்ளது. எலான் மஸ்க் வரி மற்றும் இதர நிர்வாக பிரச்சனை காரணமாக அனைத்து நிறுவனங்களையும் டெக்சாஸ்-க்கு சில வருடங்களுக்கு முன்பு தான் மாற்றினார்.
ஜனநாயக கட்சி ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மீதும், டேட்டா பாதுகாப்பு மீதும் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டு இருக்கும் காரணத்தால் எலான் மஸ்க் முயற்சிகளுக்கு பெரும் தடையாக இருக்கும், குறிப்பாக எலான் மஸ்க் பெரிய டேட்டா சென்டர் அமைக்கும் திட்டத்தில் இறங்கியிருக்கும் வேளையில், அம்மாநிலத்தின் புதிய கவர்னராக தேர்வு செய்யப்பட்டு உள்ள Gina Hinojosa பெரும் தடையாக இருப்பார் என கூறப்படுகிறது.
இதேபோல் எலான் மஸ்க் தீவிரமாக குடியரசு கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வரும் வேளையிலும், தற்போது ஜனநாயக கட்சி ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையிலும் எலான் மஸ்க்கின் வணிக நடவடிக்கைகளைத் தீவிரமாக விசாரிக்கவும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் இணைப்பைத் தடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
இதற்கு ஏற்றார் போல் நேற்று டெஸ்லா நிறுவனம் பட்டியலிடப்பட்டு உள்ள Magnificent Seven லிஸ்டில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் உயர்ந்துள்ள நிலையில் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மட்டும் சரிவை சந்தித்துள்ளது.
இத்தகைய கடுமையான சூழ்நிலையில் எலான் மஸ்க், டேட்டா சென்டர் அமைக்க இப்போது சரியான இடம் விண்வெளி தான் என கிண்டலாக ஜனநாயக கட்சியின் வெற்றியை விமர்சனம் செய்துள்ளார்.
மேலும் ஜனநாயக கட்சியின் வெற்றி ஏஐ தொழில்நுட்பத்தில் செய்யப்படும் முதலீட்டை கட்டாயம் குறைக்கும் என்பது பெரும்பாலான முதலீட்டு வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications

