எலான் மஸ்க் சொந்தமான கம்பெனி லிஸ்ட் விடவும் அவருடைய கேர்ள்பிரெண்ட் மற்றும் மனைவிகளின் லிஸ்ட் அதிகம். 52 வயதாக எலான் மஸ்க் சமீபத்தில் மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் உடன் பாக்சிங் செய்ய அழைத்து மூலம் டெக் உலகைத் தாண்டி பொதுமக்கள் மத்தியிலும் பெரிய அளவில் டிரெண்டானார்.
எலான் மஸ்க் பொறுத்த வரையில் பர்சனல் லைஃப்-க்கும் பிஸ்னஸ் லைஃப்-க்கும் பெரிய சுவர் கட்டி வைத்துள்ளார். அவருடைய பர்சனல் லைஃப் எப்போதும் வர்த்தகத்தையும், அவருடைய நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதிக்காது. இதுதான் எலான் மஸ்க்-ஐ மக்கள் கொண்டாட முக்கியக் காரணமாகவும் உள்ளது.

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் போது நிதி பிரச்சனை, கேர்ள்பிரெண்ட் உடன் பிரேக்அப், புதிய கேர்ள்பிரெண்ட் natasha bassett வருகை, கூகுள் நிறுவனர் செர்கி பிரின் மனைவி உடன் உறவு குறித்த குற்றச்சாட்டு எனப் பல விஷயங்கள் அவரைச் சுற்றி நடந்தாலும், அவருடைய சொத்து மதிப்புத் தடாலடியாக சரிந்தாலும் அசராமல் டிவிட்டர் மற்றும் டெஸ்லா நிறுவனத்தைத் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் வைத்திருந்தார்.
ஆனால் வர்த்தகச் சந்தை கைகொடுக்காத காரணத்தால் டெஸ்லா விற்பனை குறைந்து ஏரே நாளில் 14000 கோடி ரூபாய் சொத்து மதிப்பை இழந்தார். ஆனாலும் உலகின் பெரும் பணக்காரர் இவர் தான்.
எலான் மஸ்க் தலைமை வகிக்கும் டெஸ்லா நிறுவனம் இந்த ஆண்டில் முதல் முறையாக காலாண்டு விற்பனை சரிந்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் 4,35,059 கார்களை உலகளவில் டெலிவரி செய்துள்ளது, இதேவேளையில் போட்டியின் காரணமாக டெஸ்லா கார்களின் விலையைக் குறைக்கப்பட்ட நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் மார்ஜின் 4 வருடத்தில் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
2023 ஆம் ஆண்டில் மட்டுமே எலான் மஸ்க் சொத்து மதிப்பு சுமார் 70 பில்லியன் டாலர் வரையில் உயர்த்த நிலையில், இக்காலாண்டு முடிவுகள் காரணமாக வியாழக்கிழமை ஒரு நாளில மட்டும் 16.7 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்ததுள்ளார் எலான் மஸ்க்.
எலான் மஸ்க் சொத்து மதிப்பில் பெரும் பகுதி டெஸ்லா நிறுவன பங்குகள் தான் உள்ளது, சுமார் 13 சதவீத பங்குகளை அவரது கட்டுப்பாட்டில் உள்ளது. காலாண்டு முடிவுக்குப் பின்பு டெஸ்லா பங்குகள் சுமார் 9.3 சதவீதம் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது, இதன் வாயிலாக எலான் மஸ்க் சொத்து மதிப்பில் 16.7 பில்லியன் டாலர் சரிந்து 209 பில்லியன் டாலராகச் சரிந்தது.


Click it and Unblock the Notifications