2022 ஆம் ஆண்டின் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்த ஆண்டின் வர்த்தகச் சந்தையில் நடந்த பல முக்கியமான விஷயங்களுக்கு மத்தியில் அனைத்து தரப்பினரும், உலக நாடுகள் அனைத்து கவனித்த இரண்டு முக்கியமான விஷயம் உள்ளது.
ஒன்று உலகின் முன்னணி நிறுவனங்களின் பங்கு மதிப்பு தாறுமாறாகக் குறைந்த நிலையில் ரீடைல் முதலீட்டாளர்கள் முதல் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் வரையில் அனைவரின் சொத்து மதிப்புகளும் குறைந்தது.
மற்றொன்று டிவிட்டர் விற்பனை தான்.
எலான் மஸ்க்
2022ல் பெரும் தடுமாற்றம், குழப்பம், எதிர்ப்பு, அரசியல் தலையீடுகள் எனப் பல பிரச்சனைக்கு மத்தியில் டிவிட்டர் விற்பனை செய்யப்பட்டது.
இந்த இரண்டு விஷயத்திலும் தொடர்புடைய ஒருவர் தான் எலான் மஸ்க், வருடம் முடியும் நேரத்திலும் எலான் மஸ்க் முக்கியச் செய்தியில் இடம்பெற்றுள்ளார்.
பணக்காரர்கள் பட்டியல்
உலகப் பணக்காரர்கள் பட்டியல் மிகவும் குறைந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது மட்டும் அல்லாமல் மார்டன் பொருளாதாரத்தில் இதுவரையில் யாரும் எட்டாத 200 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பைக் கொண்ட பணக்காரராக உயர்ந்தது எலான் மஸ்க் மட்டுமே.
டிவிட்டர்
இந்த நிலையில் 2022 ல் டிவிட்டரை வாங்குவதற்காக டெஸ்லா பங்குகளை விற்பனை செய்த காரணத்தாலும், டெஸ்லா உற்பத்தி, டெலிவரி, விற்பனை, ஊழியர்களுக்கான நெருக்கடி போன்ற பல காரணத்தால் டெஸ்லா பங்குகள் தொடர்ந்து சரிந்து வந்தது.
எலான் மஸ்க் சொத்து மதிப்பு
இதனால் எலான் மஸ்க் சொத்து மதிப்பு யாரும் எதிர்ப்பாக்காத 200 பில்லியன் டாலர் அளவீட்டில் இருந்து சரிந்தது மட்டும் அல்லாமல் ரெசிஷன் அச்சம் காரணமாக முதலீட்டாளர்கள் அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்த காரணத்தால் எலான் மஸ்க் சொத்து மதிப்புத் தற்போது 185 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது.
2வது இடம்
இதோடு கடந்த சில வருடங்களாக யாராலும் தொட முடியாத நிலையில் முதல் இடத்தில் இருந்த எலான் மஸ்க் தற்போது உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார்.
முதல் இடம்,3வது இடம்
முதல் இடத்தை 186.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் LVMH நிறுவனத்தின் தலைவரான பெர்னார்டு அர்னால்டு குடும்பம் பிடித்துள்ளது. 3வது இடத்தை 134.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தியரான கௌதம் அதானி பிடித்துள்ளார்.
டாப் 10
இதைத் தொடர்ந்து டாப் 10 பட்டியலில்
4வது இடம் - ஜெப் பெசோஸ் - 111.8 பில்லியன் டாலர்
5வது இடம் - வாரன் பப்பெட் - 105.9 பில்லியன் டாலர்
6வது இடம் - பில் கேட்ஸ் - 105.3 பில்லியன் டாலர்
7வது இடம் - லேரி எலிசன் - 101.5 பில்லியன் டாலர்
8வது இடம் - முகேஷ் அம்பானி - 93.3 பில்லியன் டாலர்
9வது இடம் - லேரி பேஜ் - 82.5 பில்லியன் டாலர்
10 வது இடம் - கார்லோஸ் ஸ்லிம் - 82.3 பில்லியன் டாலர்
பணக்காரர்களின் சொத்து மதிப்பு
உலகின் முன்னணி பணக்காரர்களின் சொத்து மதிப்பு பெரும்பாலும் அவர்களின் நிறுவன பங்குகள் அடிப்படையில் தான் அமைகிறது. இதனால் வர்த்தகம், பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு மூலம் தடுமாற்றங்கள் நிறுவன பங்குகள் சரியும் போது பணக்காரர்களின் சொத்து மதிப்பும் சரியும்.
டெஸ்லா பங்குகள்
இப்படி எலான் மஸ்க் சொத்து மதிப்பு அதிகப்படியாக டெஸ்லா பங்குகளைச் சார்ந்து இருக்கும் நிலையில் டெஸ்லா பங்குகள் சரிந்த நிலையில் எலான் மஸ்க் சொத்து மதிப்பு 2022ல் அதிகப்படியாக 219 பில்லியன் டாலரில் இருந்து தற்போது 185 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது.
டெஸ்லா பங்குகள் 402.67 டாலரில் இருந்து தற்போது 174 டாலராகச் சரிந்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications