ஆட்டோமொபைல் துறையை மொத்தமாக புரட்டிப்போட்டு உள்ள டெஸ்லா நிறுவனத்தின் கார்கள் அமெரிக்கா, சீனா, ஐரோப்பாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டாலும், இன்னும் கமர்சியலான கார் ஆக மாறவில்லை. இதற்கு முக்கியமான காரணம் டெஸ்லா கார்களின் விலை தான், டெஸ்லா சமீப காலமாக போட்டியை சமாளிக்க தனது முக்கிய தயாரிப்புகளின் விலையை கணிசமாக குறைத்து வருகிறது. ஆனால் இது பல பிரச்சனையை முதலீட்டு சந்தையில் உருவாக்கி வருகிறது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் டெஸ்லா நிறுவனமும் ஹூண்டாய், ஹோண்டா, டோயோட்டா போன்று கமர்சியலான கார் நிறுவனமாக மாற வேண்டும், அதேவேளையில் பங்குச்சந்தையிலும் அசத்த வேண்டும். இதற்காக எலான் மஸ்க் நீண்ட காலமாக கிடப்பில் போட்டு இருந்த திட்டம் தான் 24000 டாலருக்கு குறைவான விலையில் பட்ஜெட் டெஸ்லா கார்.

ஒவ்வொரு டெஸ்லா கூட்டத்திலும் இக்கேள்வி இடம்பெறும் போது எலான் மஸ்க் தொடர்ந்து சமாளித்து வரும் வேளையில் சமீபத்திய விலை குறைப்பின் மூலம் டெஸ்லா பங்குகள் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. இப்படியேவிட்டால் வேலைக்கு ஆகாது என முடிவு செய்த எலான் மஸ்க் பட்ஜெட் கார் திட்டத்தை தூசு தட்டி திறந்தார்.
பட்ஜெட் கார் திட்டத்தை திறந்த அடுத்த நொடியே இந்தியா தான் எலான் மஸ்க் மனதில் வந்த முதல் விஷயம். இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பது குறித்து நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் வரும் வேளையில் இந்த 24,000 டாலர் அதாவது 19 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட கார்-ஐ இந்தியாவில் தயாரிப்பதற்காக டெஸ்லா உயர் அதிகாரிகள் மத்திய அரசு அதிகாரிகளை சந்திக்க உள்ளனர்.
டெஸ்லா உலகளாவிய வர்த்தகத்தில் தற்போது சீனாவில் மாடல் 3 கார்-ஐ 32,200 டாலர் என்ற குறைவான விலைக்கு விற்பனை செய்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் கார் இதைவிடவும் 24 சதவீத குறைவான விலையான 24,000 டாலருக்கு விற்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இப்படி இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்ஜெட் விலை டெஸ்லா கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் காரணத்தால், டெஸ்லாவுக்கு இந்தியா முக்கிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஹப் ஆக மாற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இதேவேளையில் டெஸ்லா-வின் அடுத்த தலைமுறை வாகனங்களின் உற்பத்தி செலவுகள் சுமார் 50 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. இதுவும் இந்தியாவுக்கு கைகொடுத்தால் 15000 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் இந்தியாவில் டெஸ்லா கார்களை விற்பனைக்கு வரும். ஆனால் எலான் மஸ்க் திட்டமே வேறு.
இந்த மலிவு விலை கார் திட்டம் மட்டும் வொர்க்அவுட் ஆகி கைகொடுத்தால் இதை வைத்து எலான் மஸ்க் உலக நாடுகள் முழுவதும் தானாக இயங்கும் ரோபோ டாக்சி உருவாக்கும் முயற்சியில் இறங்க திட்டமிட்டு உள்ளார். பட்ஜெட் விலை கார்களை தயாரிக்க எலான் மஸ்க்-ன் டெஸ்லா தற்போது மெக்சிகோ நாட்டில் தொழிற்சாலை கட்டமைத்து வருகிறது. இந்த வரிசையில் இந்தியாவும் இடம்பெறும்.
டெஸ்லா தற்போது அமெரிக்காவில் கலிபோர்னியா, டெக்சாஸ் ஆகிய பகுதிகளிலும், வெளிநாட்டில் ஜெர்மனியின் பெர்லின், சீனாவில் ஷாங்காய் ஆகிய பகுதிகளில் தொழிற்சாலை வைத்து இயங்கி வருகிறது. இதில் சீனா ஷாங்காய் தொழிற்சாலை மட்டுமே மொத்த உற்பத்தியில் சுமார் 40 சதவீத பங்கீட்டை கொண்டு உள்ளது. தற்போது சீன தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் துவங்க உள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications