டிவிட்டர் ஊழியர்களில் 75% பேர் பணிநீக்கமா.. ஊழியர்களை கதற வைக்கும் எலான் மஸ்க்!

உலகின் மிகப்பெரிய பில்லியனரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தினை வாங்கும் திட்டத்தின் மத்தியில், அதன் வருங்கால முதலீட்டாளர்களிடம் ட்விட்டர் ஊழியர்களில் 75% பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தில் தற்போது 7500 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆக இவர்களில் பலரும் பணி நீக்கம் செய்யப்பட்டலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. இது ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

யார் யார் பணி நீக்கம்?

யார் யார் பணி நீக்கம்?

ட்விட்டர் நிறுவனத்தில் வரும் மாதங்களில் பணி நீக்கம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த பணி நீக்க நடவடிக்கையில் யார் யார் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

ட்விட்டரின் தற்போதைய நிர்வாகம் அடுத்த ஆண்டின் இறுதிக்குள் ஊழியர்களின் சம்பள செலவினை 800 மில்லியன் டாலர்களாக குறைக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் ஊழியர்கள் கவலை

ட்விட்டர் ஊழியர்கள் கவலை

ட்விட்டரின் இந்த அறிவிப்பால், குறைந்தபட்சம் கால்பகுதி ஊழியர்கள் நிறுவனத்தினை விட்டு வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் ட்விட்டர் நிறுவனத்தின் மனிதவள அதிகாரிகள், நிறுவனத்தில் பெரும் பணி நீக்க திட்டம் எதுவும் இல்லை என கூறியிருந்தனர். மொத்தத்தில் தங்களின் வேலையானது இனியும் நிலைக்குமா? அல்லது வெளியேற்றப்படுவோமா? என்ற பதற்றமான நிலையே இருந்து வருகின்றது.

மறுசீரமைப்பு திட்டம்

மறுசீரமைப்பு திட்டம்

மனிதவள துறையானது வெளியேற்ற திட்டமிடப்படவில்லை என்று கூறினாலும், எலான் மஸ்க் நிறுவனத்தினை வாங்க முன்வருவதற்கு முன்பே நிறுவனம் மறுசீரமைப்பு நடவடிக்கையினை திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்போதைய சூழலில் இது குறித்து ட்விட்டர் எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் வெளியிடவில்லை.

வருமானத்தை விட செலவு அதிகம்

வருமானத்தை விட செலவு அதிகம்

பல மாதங்களாக நடந்து வரும் இந்த பேச்சு வார்த்தையில் ஒரு கட்டத்தில் பின் வாங்கிய எலான் மஸ்க், மீண்டும் தொடரப்போவதாகவும் பின்னர் கூறினார். ஒரு சமயம் எலான் மஸ்க் ட்விட்டர் ஊழியர்களை சந்தித்தபோது, ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்களா? என்ற கேள்விக்கு, ட்விட்டர் நிறுவனத்தின் வருமானத்தை விட செலவு அதிகமாக உள்ளது. இது கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

சிறந்த ஊழியர்களுக்கு கவலை வேண்டாம்

சிறந்த ஊழியர்களுக்கு கவலை வேண்டாம்

மேலும் அந்த சமயத்தில் சிறந்த ஊழியர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் கூறியிருந்தார். ஆக இதன் மூலம் ட்விட்டர் திறன் வாய்ந்த ஊழியர்களை வைத்துக் கொண்டு மற்றவர்களை வெளியேற்றம் செய்யுமா? என்பதும் பெரும் கேள்வியாக எழுந்தது. தற்போது எலான் மஸ்கின் இந்த கருத்தானது மெய்படலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+