உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் பல மாத போராட்டத்திற்குப் பின்பு கடன் வாங்கி டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியது எல்லோருக்கும் தெரியும், ஆனால் டிவிட்டரை வாங்கிய பின்பு எதிர்பார்த்தபடி டிவிட்டர் மூலம் வருமானம் கிடைக்கவில்லை. இதுமட்டும் அல்லாமல் டிவிட்டர் கைப்பற்றுவதற்காக வாங்கிய கடன் எலான் மஸ்க்-ன் கழுத்தை நெரித்து வந்தது.
இந்த நிலையில் தான் எலான் மஸ்க் தனது சொந்தமாக எக்ஸ் என்னும் டிவிட்டர் நிறுவனத்தை மொத்தமாக தன்னுடைய சொந்த ஏஐ நிறுவனமான xAI க்கு விற்றுள்ளார். இதன் மூலம் சமூக ஊடக தளமான X இனி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI உடன் பின்னி பிணைந்து இயங்கப் போகிறது.

எலான் மஸ்க் தனது செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI க்கு சமூக ஊடக தளமான X-ஐ மாற்றும் பரிவர்த்தனையை முழுமையாக நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த கையகப்படுத்தும் திட்டத்தில் பண பரிமாற்றமாக இல்லாமல் முழுமையாகப் பங்கு பரிமாற்றமாக நிறுவனம் கைமாற்றப்பட்டு உள்ளது.
2022ஆம் ஆண்டு எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு வாங்கப்பட்ட டிவிட்டர் தற்போது 33 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் xAI நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. X மற்றும் xAI இரண்டும் தனியார் நிறுவனங்களாக இருப்பதால் பங்குச்சந்தைக்கும், பொது மக்களுக்கு நிதி நிலவரத்தையும், மதிப்பீட்டின் கணக்கீட்டையும் வெளியிட வேண்டியதில்லை.
எலான் மஸ்க் இந்த டீல் குறித்து தனது X பதிவில் சில முக்கியமான தகவலை வெளியிட்டு உள்ளார், அதில் xAI இன் மேம்பட்ட AI திறன் மற்றும் X தளம் மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ள ரீச் உடன் இணைப்பதன் மூலம் சிறப்பான, ஆற்றல் மிகுந்த சேவையை மக்களுக்கு அளிக்க முடியும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நிறுவன மாற்றத்தில் xAI இன் மதிப்பீடு 80 பில்லியன் டாலராக உள்ளது, அதே நேரத்தில் X இன் மதிப்பு 33 பில்லியன் டாலராக கருதி இந்த மாற்றம் நடந்துள்ளது என விளக்கினார். 2023 ஆம் ஆண்டு தான் எலான் மஸ்க் xAI நிறுவனத்தைத் தொடங்கினார், இதற்குள் 80 பில்லியன் டாலர் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. ChatGPT உருவாக்கிய OpenAI நிறுவனம் 300 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டு வெள்ளிக்கிழமை 40 பில்லியன் டாலர் மதிப்பிடப்பட்டது.
xAI மற்றும் X இணைப்பதன் மூலம் இரு நிறுவனங்களின் தரவு, ஏஐ மாடல்கள், கணினி, விநியோகம் மற்றும் ஊழியர்களும் இணைக்கப்பட்டு இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த இணைப்பு பணிகள் அதிகாரப்பூர்வமாக இன்று முதல் துவங்குவதாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட டிவீட்டில் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications