சர்ச்சையான டிவீட்க்கு பெயர்போன எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று டிவிட்டர் சிஇஓ பதவியில் இருந்து ஜாக் டோர்சி-ஐ தள்ளிவிட்டு பராக் அகர்வால் தனது இடத்தைப் பிடித்தது போன்ற ஒரு மீம்-ஐ டிவீட் செய்துள்ளார். இந்த டிவீட்டால் தற்போது இணையத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.
பராக் அகர்வால்
நவம்பர் 29ஆம் தேதி டிவிட்டர் நிறுவனத்தின் நிறுவனரான ஜாக் டோர்சி தனது சிஇஓ பதவியில் இருந்து விலகி இந்தியரான பராக் அகர்வால்-ஐ புதிய சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார். இவரின் நியமனத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் மாபெரும் டெக் நிறுவனங்களின் இந்திய தலைவர்கள் பட்டியலில் பராக் அகர்வாலும் சேர்ந்தார்.
எலான் மஸ்க்
பராக் அகர்வால்-ன் நியமனத்தை இந்தியா முழுவதும் பெருமைப்பட்ட போது தான், எலான் மஸ்க் தனது டிவிட்டரில் அமெரிக்கா இந்தியர்களின் திறமை மூலம் பெரிய அளவில் பயன்பெற்று உள்ளது எனக் கூறினார், ஆனால் இன்று முற்றிலும் மாறுபட்ட கருத்தை எலான் மஸ்க் பதிவிட்டு உள்ளார்.
சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின்
உலகளவில் மிகவும் பிரபலமான சோவியத் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினின் The Water Commissar புகைப்படத்தில் ஒரு காலத்தில் அவருடைய நம்பிக்கையாளராக இருந்த Nikolai Yezhov இருப்பார், ஆனால் இது பல்வேறு காரணங்களுக்காகப் பின்னாளில் இப்புகைப்படத்தில் இருந்து Nikolai Yezhov நீக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
ஜாக் டோர்சி - Nikolai Yezhov
இந்த இரு புகைப்படத்திலும் சோவியத் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின் இடத்தில் புதிதாக நியமிக்கப்பட்டு உள்ள பராக் அகர்வால் முகத்தைச் சேர்க்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு புகைப்படத்தில் Nikolai Yezhov முகத்திற்குப் பதிலாக ஜாக் டோர்சி முகம் மாற்றப்பட்டு இருந்தது. அடுத்த புகைப்படத்தில் ஜாக் டோர்சி-ஐ பராக் அகர்வால் மாஸ்கோ கால்வாயில் தள்ளிவிட்டது போன்ற மீம்-ஐ எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மக்கள் கருத்து
எலான் மஸ்க்-ன் இந்த டிவீட்டுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தும், பலர் ஆதரித்தும் வருகின்றனர். மேலும் Nikolai Yezhov செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி ஜாக் டோர்சி-யை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
ஜாக் டோர்சி
இதேவேளையில் ஜாக் டோர்சி எதையும் கண்டுகொள்ளாமல் தனது பேமெண்ட் சேவை நிறுவனமான Square-ன் பெயரை 'Block' என மாற்றிப் புதிதாக அறிமுகம் செய்யும் பிளாக்செயின் பேமெண்ட் தளம் குறித்து அறிகுறியைக் கொடுத்துள்ளார். ஜாக் டோர்சி பல வருடங்களாகப் பிளாக்செயின், கிரிப்டோ, NFT குறித்து ஆதரித்துப் பேசி வருகிறார்.
ஜாக் டோர்சி 'Block'
ஜாக் டோர்சி 'Block' எனப் பெயர் மாற்றியதன் மூலம் Cash App, TBD மற்றும் Square ஆகிய அனைத்து சேவைகளையும் ஓரே குடைக்குள் கொண்டு வந்துள்ளார். இந்தப் புதிய பெயருடன் டிசம்பர் 10 முதல் நிறுவனம் இயங்கும் எனத் தெரிகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications