உலகின் பெரும் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது செயற்கைகோள் வாயிலாக இயங்கும் பிராட்பேன்ட் சேவையான Starlink-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் மிகவும் ஆர்வமாக இருப்பதாக பிரதமர் மோடி உடனான சந்திப்பில் தெரிவித்தார்.
ஆனால் இந்தியாவில் ஸ்டார்லிங்க் வருவதற்கு, நாட்டின் பெரும் பணக்காரராக இருக்கிறார் முகேஷ் அம்பானி. இதனால் மத்திய அரசுக்கு என்ன செய்வதென தெரியாமல் விழித்துக்கொண்டு உள்ளது. உண்மையில் உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்கிற்கும், இந்திய பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானிக்கும் என்ன பிரச்சனை..?

செயற்கைகோள்கள் வாயிலாக இயங்கும் பிராட்பேன்ட் சேவைகளை இயக்க Ka ஸ்பெக்ட்ரம் பேன்ட் (27.5 to 29.1 GHz and 29.5 to 30 GHz) மற்றும் Ku ஸ்பெக்ட்ரம் பேன்ட் (14 GHz) இணைந்து தான் கொடுக்க முடியும்.
இந்த ஸ்பெக்ட்ரத்தில் தான் தற்போது பெரும் பிரச்சனை உருவாகியுள்ளது, இந்தியாவில் செயற்கைகோள்கள் வாயிலாக இயங்கும் பிராட்பேன்ட் சேவைகள் இல்லாத காரணத்தால் பொது பயன்பாட்டுக்காக இதுவரையில் இந்த இரு ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்படவில்லை.
எலான் மஸ்க் தரப்பில் உலக நாடுகள் போலவே இந்தியாவிலும் ஸ்பெக்டரத்தை ஏலம் விடாமல் சேவை அளிக்க மட்டும் லைசென்ஸ் கொடுங்க என கூறுகிறார். இதற்கு வாதமாக இயற்கை வளத்தை நிறுவனங்கள் பகிரிந்துக்கொள்ள வேண்டும், ஏலம் விட்டால் ஒவ்வொரு பகுதியாக பிரிக்க வேண்டியிருக்கும் இது நிறுவனங்களுக்கு அதிகப்படியான செலவுகளை உருவாக்கும் என தெரிவித்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ பிற ஸ்பெக்ட்ரம் போல Ka மற்றும் Ku அலைக்கற்றையும் பொதுவாக ஏலம் விட வேண்டும், ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்திய சந்தையில் வாய்ஸ், டேட்டா சேவை அளிக்கிறது எனில் இந்திய நிறுவனங்களும் சமநிலையில் போட்டிப்போட ஏலம் வழிவகுக்கும் என தெரிவிக்கிறது.
இதனால் மத்திய அரசு இந்திய சந்தைக்கு எது சரி என்பதை ஆய்வு செய்து வருகிறது. இந்திய பிராட்பேன்ட் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ சுமார் 25 சதவீத சந்தையை கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications