தொழில்நுட்பத்தின் பயன்பாடு இன்று பல துறையில் உச்சத்தை தொட்டு வரும் வேளையில், எலான் மஸ்க் பல ஆண்டுகளாக மனிதர்களின் வாழ்க்கையை மாற்றும் முயற்சியில் தனது சொந்த நிறுவனமான Neuralink மூலம் முயற்சி செய்து வருகிறார். எலான் மஸ்க்-ன் நிறுவனம் பக்கவாதம், கண்பார்வை இல்லாதவர்களின் பிரச்சனை ஒரு சின்ன சிப் வாயிலாக சரி செய்யும் முயற்சியை பல ஆண்டுகளாக செய்துவருகிறார்.
இந்த முயற்சியின் பல கட்ட சோதனையில் எலான் மஸ்க்-ன் நியூராலிங்க் குரங்குகளின் மூளையில் சிப் வைத்து பரிசோதனை செய்து வெற்றிக் கண்டது மட்டும் அல்லாமல் முதல் கட்ட சோதனையில் இருந்து பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. இந்த வெற்றியின் மகுடமாக அமெரிக்க அரசு Neuralink-ன் சிப்-ஐ மனித மூளையில் வைத்து பரிசோதனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மட்டும் எலான் மஸ்க் வெற்றி அடைந்தால் பல கோடி மக்களின் வாழ்க்கையை மாற்ற முடியும்.

Neuralink என்பது 2016ஆம் ஆண்டில் எலான் மஸ்க் தனது சொந்த முதலீட்டில் உருவாக்கப்பட்ட ஒரு brain-implant நிறுவனமாகும், இந்நிறுவனத்தின் மொத்த உரிமையும் எலான் மஸ்க் கையில் மட்டுமே உள்ளது. இந்த நிறுவனம் 2019 முதல் பக்கவாதம், கண்பார்வை பிரச்சனைக்களுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனது பல்வேறு சோதனைகள் அடிப்படையில் 2022ஆம் ஆண்டு துவக்கத்தில் மனித மூளையில் சிப் வைத்து பரிசோதனை செய்ய அமெரிக்க அரசின் FDA அமைப்பிடம் விண்ணப்பம் கொடுத்தது.
சுமார் ஒரு வருடத்திற்கு பின்பு Neuralink-ன் முயற்சிகள், சோதனைகள் ஆய்வு செய்து அதன் பின்பு அமெரிக்க அரசின் Food and Drug Administration (FDA) அமைப்பு நியூராலிங்க்-ன் brain-implant அதாவது சிப்-ஐ மனித மூளையில் வைத்து பரிசோதனை செய்ய ஒப்புதல் கொடுத்துள்ளது. இது நியூராலிங்க் நிறுவனத்தின் வளர்ச்சி பாதையை வேகப்படுத்தியுள்ளது. இந்த ஒப்புதலுக்கு முன்பு பல முறை FDA அமைப்பு நியூராலிங்க-ன் விண்ணப்பத்தை ரத்து செய்துள்ளது.

FDA அமைப்பு Neuralink-ன் உருவாக்கியுள்ள சிப்-ல் இருக்கும் லித்தியம் ஐயன் பேட்டரி குறித்து பல எதிர்ப்புகளையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. Neuralink-ன் விலங்குகள் சோதனை குறித்து பல கேள்விகளும், பல வழக்குகளும், பல கோரிக்கைகளும் இருந்து வரும் வேளையில் FDA அமைப்பு மனித மூளையில் சோதனை செய்ய ஒப்புதல் கிடைத்துள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications