எலான் மஸ்க் வியாழக்கிழமை தனது ட்விட்டர் கணக்கில் டிவிட்டர் அல்லது x.com நிறுவனத்திற்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியைக் கண்டுபிடித்ததாகவும், தான் சிஇஓ பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் இங்க தான் எலான் மஸ்க் முதலீட்டாளர்களுக்கு டிவிஸ்ட் கொடுத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வான பராக் அகர்வால்-ஐ கிண்டல் செய்யும் விதமாக அவர் வளர்க்கும் நாயை சிஇஓ-வாக நியமித்தார். டிசம்பர் மாதம் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதிவியை எடுக்கும் அளவுக்கு முட்டாள்தனமாக யாரையாவது கண்டால், நான் விரைவில் CEO பதவியை ராஜினாமா செய்வேன் என டிவீட் செய்தார்.

இந்த நிலையில் எலான் மஸ்க் தனது டிவிட்டர் பதவில் டிவிட்டர் சிஇஓ பதவிக்கு ஒருவரை தேர்வு செய்துள்ளதாகவும், அவர் ஒரு பெண் என்றும், 6 வாரத்தில் பணியை துவங்க உள்ளார் என்றும் தெரிவித்தார். இதன் பின்பு டிவிட்டர் சிஇஓ பொறுப்புக்களில் இருந்து எலான் மஸ்க் ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
ஆனால் டிவிட்டரை விட்டு எலான் மஸ்க் வெளியேறப்போவது இல்லை, டெஸ்லா முதலீட்டாளர்கள் அனைவரும் கேட்டது எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் தினசரி பணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பது தான். ஆனால் எலான் மஸ்க் இதை செய்ய மறுத்துள்ளார், தற்போது சிஇஓ பதவியில் இருந்து விலகினாலும் தொடர்ந்து டிவிட்டர் நிறுவனத்தில் பணியாற்ற உள்ளார்.
எலான் மஸ்க் தற்போது சிஇஓ பதவியில் இருந்து விலகி, எக்ஸ்கியூட்டிவ் சேர்மன் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பொறுப்பை ஏற்க உள்ளார். இப்பதவியில் இருந்துக்கொண்டு டிவிட்டர் நிறுவனத்தின் ப்ராடெக்ட், சாப்ட்வேர், சிஸ்டம் ஆப்ரேஷன்ஸ் பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
இதன் மூலம் எலான் மஸ்க் டெஸ்லா முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வாக்குறுதியான, தான் டிவிட்டரில் பணியாற்றும் நேரத்தை குறைக்கப்பதாக கூறியதை மீற உள்ளார். எலான் மஸ்க் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பொறுப்பை ஏற்க முக்கிய காரணமும் உண்டு.

டிவிட்டர் பயணத்தில் மிகவும் முக்கிய கட்டமாக எலான் மஸ்க்-ன் கனவு திட்டமான சூப்பர் ஆப் 'X' உடன் டிவிட்டர் இணைக்கப்பட்டு உள்ளது என சில வாரங்களுக்கு முன் எலான் மஸ்க் தெரிவிட்டார். அமெரிக்க நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில் டிவிட்டர் என்ற நிறுவனமே தற்போது இல்லை, டிவிட்டர் இன்க், X Corp உடன் இணைக்கப்பட்டு உள்ளது என எலான் மஸ்க் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு.
எலான் மஸ்க் X என்னும் the everything app என்பது ஒரு சூப்பர் ஆப் போல இத்தளத்தில் சமுக வலைத்தளம் முதல் பேமெண்ட், ஷாப்பிங் வரையில் அனைத்தும் இருக்கும். இதற்கு எளிய உதாரணம் சீனாவின் WeChat.
WeChat செயலில் சேட்டிங் சேவை மட்டும் அல்லாமல் தினமும் மக்கள் பயன்படுத்தும் அனைத்து சேவைகளும் இதில் இருக்கும், இதனால் சீன மக்கள் WeChat செயலியை விட்டு வெளியே வருவதே இல்லை என்பது தான் உண்மை.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications