செயற்கை நுண்ணறிவு துறையில் பல நிறுவனங்கள் பல ஆண்டுகளாக பணியற்றி வந்தாலும், மக்கள் கைகளில் முதலில் கொண்டு வந்து சேர்த்தது என்னவோ ChatGPT உருவாக்கிய OpenAI நிறுவனம் தான், இதற்கு பின்பு தான் கூகுள்-ன் Bard வந்தது. ஆனால் OpenAI நிறுவனம் உருவான போதும், அதற்கான ரோடுமேப் போட்ட போதும் நெருங்கி பணியாற்றியவர் எலான் மஸ்க்.
இப்படியிருக்கும் வேளையில் AI மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கும் இந்த தருணத்தில் நியூராலிங்க்-ல் மனித மூளையில் சிப் வைத்து பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கண்டு வரும் எலான் மஸ்க் AI துறையை விட்டு வைப்பாரா என்ன..?

AI துறையில் எலான் மஸ்க் நிறுவனத்தை உருவாக்குவதாக பல வாரங்களுக்கு முன்பே தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தோம், இதை 100க்கு 110% உண்மையாக்கும் வகையில் தற்போது எலான் மஸ்க்-ன் X Corp நிறுவனம் X.AI என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இந்த X Corp கீழ் தான் டிவிட்டர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நேரத்தின் படி ஜூலை 12 ஆம் தேதி மாலையில் எலான் மஸ்க் தனது புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனமான XAI என்ற நிறுவனத்தின் X.AI என்ற இணையதளத்தை அறிமுகம் செய்தார். இந்த நிறுவனம் பிரபஞ்சத்தின் உண்மையான இயல்பு நிலையை புரிந்துக்கொள்ள இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உருவாக்கியுள்ளோம் என X.AI என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிறுவனத்தின் அணி, நிறுவனம் குறித்த விபரங்களை ஜூலை 14 ஆம் தேதி டிவிட்டர் ஸ்பேஸ் சாட்-ல் மக்கள் கேட்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிறுவனத்தையும் வழக்கம் போல் எலான் மஸ்க் தான் நிர்வாகம் செய்ய உள்ளார். இந்த நிறுவனத்தில் டீப்மையின்ட், OpenAI, Google Research, Microsoft Research, Tesla, மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் முன்பு பணியாற்றியவர்கள் இணைந்துள்ளனர். XAI நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் எலான் மஸ்க், இகோர் பாபுஷ்கின், மானுவல் குரோயிஸ், யுஹுவாய் (டோனி) வூ, கிறிஸ்டியன் செகெடி, ஜிம்மி பா, டோபி போலன், ரோஸ் நோர்டீன், கைல் கோசிக், கிரெக் யாங், குடோங் ஜாங், ஜிஹாங் டாய் ஆகியோர் உள்ளனர்.
ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் தனது AI நிறுவனத்திற்காக Nvidia-வில் இருந்து பல ஆயிரம் சக்திவாய்ந்த பிராசசர், ஜிபியூ-க்களை வாங்கினார், இதன் பின்பு நடந்த ஒரு இன்டர்வியூவில் எலான் மஸ்க் TruthGPT என்ற ஒரு சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
எலான் மஸ்க் தனது AI நிறுவனத்தின் வாயிலாக deep learning, large neural networks போன்றவற்றில் பணியாற்றுவார் என்றும், இவருடைய பணிகள் AI துறையின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications