சமூகவலைத்தளத்தில் விசித்திரமான செயல்களுக்கு பெயர்போன டெக் பில்லியனரான எலான் மஸ்க், தனது X கணக்கில் பெயர் மற்றும் ப்ரொபைல் போட்டோவை மாற்றியது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எதற்காக மாற்றினார்..? பெயர் மாற்றம் செய்யது மூலம் என்ன நடந்தது..? என்பது எத்தனை பேருக்கு தெரியும், வாங்க மொத்த கதையும் சொல்கிறேன்.
எலான் மஸ்க், எக்ஸ் கணக்கில் தனது பெயரை "எலான் மஸ்க்" என்பதிலிருந்து "கேகியஸ் மாக்சிமஸ்" என்ற மர்மமான பெயரை மாற்றியுள்ளார். மேலும், அவரது ப்ரொபைல் படத்தில் பிரபலமான "Pepe the Frog" கதாபாத்திரம் வீடியோ கேம் விளையாடும் போட்டோவை வைத்திருந்தார்.

இந்த எதிர்பாராத மாற்றம் மஸ்க்கின் தொடர்பவர்களையும், கிரிப்டோகரன்சி சமூகத்தையும் ஆர்வத்தில் ஆழ்த்தியுள்ளது.
"கேகியஸ் மாக்சிமஸ்" (KEKIUS) என்பது கிரிப்டோகரன்சி சந்தையில் பலரும் அறியப்படாத ஒரு மீம் காயின், எலான் மஸ்க் கிரிப்டோ ஆர்வலர் என்பது அனைவருக்கும் தெரியும், இந்த நிலையில் Kekius Maximus பெயரை மாற்றியதன் மூலம் KEKIUS மீம்காயின் தடாலடியாக 500 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
KEKIUS கிரிப்டோகரன்சி இணைய கலாச்சாரத்திலிருந்து, பலரும் அறிந்திடாத "Pepe the Frog" மீமிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு புதிய கிரிப்டோகரன்சி ஆகும். இந்த மீம் காயின் decentralized finance (DeFi)) என்ற பிரிவில் இயங்கி வருகிறது.
எலான் மஸ்க்கின் பெயர் மாற்றத்திற்கு முன்பு யாரும் அறியாத இந்த KEKIUS மீம்காயின் ஒரு நாளில் 497.56% உயர்ந்து பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
memecointer.com தகவல்படி 2024 ம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி நிலவரப்படி, KEKIUS $0.005667 என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது, வெறும் 24 மணிநேர வர்த்தக அளவு 2.73 மில்லியன் டாலரை தாண்டியது. இந்த திடீர் உயர்வு, எலான் மஸ்க் செயலால் நடந்தது.
ஆனால் தற்போது Kekius Maximus 70 சதவீத சரிவில் $0.0113413 டாலருக்கு சரிந்துள்ளது.
இதேபோல் தான் எலான் மஸ்க் டோஜ்காயின் மதிப்பை மிகப்பெரிய அளவில் உயர்த்தினார், மஸ்க் தற்போது அரசுடன் நெருங்கி பணியாற்றும் வகையில் இத்தகைய நம்பிக்கை அல்லாத மீம் காயின்களை பிரபலப்படுத்தும் செயல்பாடுகளை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதேவேளையில் KEKIUS பெயரின் வடிவில் பல கிரிப்டோ கரன்சிகள் வர்த்தகம் செய்யப்படுகிறது. இப்படியும் ஏமாற்றும் வேலைகள் நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications