எலான் மஸ்க் கட்டுப்பாட்டில் இருக்கும் டிவிட்டர் பல மாற்றங்கள், தடுமாற்றங்களைத் தாண்டி, கடந்த சில நாட்களாக எவ்விதமான பிரச்சனைகளும் இல்லாமல் இயங்கி வருகிறது. இதனால் எலான் மஸ்க் திட்டமிட்ட பல பணிகள், திட்டங்களை வேகமாக முடிக்க வாய்ப்பு உள்ளது.
இதைத் தொடர்ந்து பல மாதங்களாகக் கிடப்பில் இருக்கும் நிறுவனங்களுக்கான வெரிபிகேஷன் திட்டத்தை விரைவில் வெளியிட உள்ளது டிவிட்டர் நிர்வாகம். இதனால் உலகம் முழுவதும் இருக்கும் நிறுவனங்கள், செலிப்ரிட்டி, அரசு அமைப்புகள் எலான் மஸ்க் அறிவிப்புக்காகக் காத்திருக்கின்றனர்.
இன்றைய டிஜிட்டல் உலகில் டிவிட்டர் தளத்தின் மூலம் வாடிக்கையாளர்களிடம் தொடர்பில் இருக்கவும், மக்களுக்கு முக்கியமான தகவல்களைக் கூறவும், ரசிகர்களுக்குத் தொடர்ந்து அப்டேட் கொடுக்கவும் டிவிட்டர் மிகவும் முக்கியமான தளமாக உள்ளது.
8 டாலர்
அக்டோபர் மாதம் அனைவருக்கும் 8 டாலர் மாத கட்டணத்தில் ப்ளூ டிக் அளிக்கப்பட்ட போது பல போலி கணக்குகள் நிறுவனங்கள் பெயருடன் கணக்கை உருவாக்க இலவசம், ஆஃபர் போன்ற பல்வேறு ட்வீட்களைச் செய்து பல நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தது.
ப்ளூ டிக் சேவை
இதனால் இந்த 8 டாலர் கட்டணத்தில் ப்ளூ டிக் சேவை வேகமாகத் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலையில் பல மாத திட்டமிடல் உடன் எலான் மஸ்க் தலைமையிலான நிர்வாகம் புதிய வெரிபிகேஷன் முறையைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
புதிய வெரிபிகேஷன் முறை
இப்புதிய வெரிபிகேஷன் முறையில் பொதுவான நீல நிற அடையாளத்தை நீக்கிவிட்டு, நிறுவனங்கள், அரசு மற்றும் தனிநபர்களின் ட்விட்டர் கணக்குகளுக்கு வெவ்வேறு வண்ண வெரிபிகேஷ் டிக் பேட்ச்-களை வழங்க உள்ளது.
3 நிறம்
அதாவது நிறுவனங்களுக்குத் தங்க நிறத்தில் பேட்ச்-ம், அரசாங்கத்தைச் சார்ந்த அமைப்புகளின் கணக்கிற்குச் சாம்பல் நிற பேட்ச்-ம், தனிநபர்களுக்கு நீல நிற பேட்ச்-ம் வழங்கப்படுகிறது. முன்பு செலிப்ரிட்டி-களுக்குத் தனியாக ஒரு பேட்ச் அளிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியானது.
விரைவில் அறிமுகம்
இந்த நிலையில் இந்தப் புதிய வெரிபிகேஷன் திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக டிவிட்டர் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது. இதேபோல் பெரு நிறுவனங்களின் கிளை நிறுவன கணக்கில் தனது தாய் நிறுவனத்தின் லோகோ-வின் பேட்ச் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
டிவிட்டர்
டிவிட்டர் தளத்தில் முன்பு நிறுவனங்கள், செலிப்ரிட்டி, அரசு அமைப்புகள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் நீல நிற டிக் கொண்ட ஒரு பேட்ச் அளிக்கப்பட்டது. இதன் மூலம் போலி கணக்குகள் மத்தியில் உண்மையான கணக்கு என்று தனியாகப் பிரிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் இக்கணக்குகளுக்குக் கூடுதலான சேவைகள் அளிக்கப்பட்டது.
எலான் மஸ்க்
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய பின்பு பல மாற்றங்களைச் செய்ய முடிவு செய்தார், இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் போலிக் கணக்குகளைக் கண்டறிய நீல நிற டிக் கொண்டி வெரிபிகேஷன் அனைவருக்கும் மாதம் 8 டாலர் கட்டணத்தில் அளிக்கப்பட்டது.
நெட்வொர்க் சேவை
இதனால் பல பிரச்சனைகள் உருவான நிலையில் தற்போது புதிய மாற்றுத்துடன் வெரிபிகேஷன் திட்டத்தை எலான் மஸ்க் அறிமுகம் செய்ய உள்ளார். இதோடு பெரு நிறுவனங்கள் தனது கிளை டிவிட்டர் கணக்குகள் மூலம் தனி நெட்வொர்க் அமைக்கும் சேவையை அறிமுகம் செய்துள்ளது டிவிட்டர். இதற்காகத் தான் பெரு நிறுவனங்களின் கிளை நிறுவன கணக்கில் தனது தாய் நிறுவனத்தின் லோகோ-வின் பேட்ச் வழங்கப்படுகிறது.
நிறுவனங்கள்
நிறுவனங்களுக்கான Twitter வெரிபிகேஷன் பேட்ஜ்-ஐ பெற https://business.twitter.com/en/form/verification-for-organizations.html என்ற இணையத் தளத்திற்குச் செல்ல வேண்டும், விரைவாக வெரிபிகேஷன் பேட்ஜ் முன்கூட்டிய பதிவுசெய்ய வேண்டும்.
நீங்கள் சேர்க்கப்படும் கணக்குச் சரியாக இருக்கும் பட்சத்திலும், தகுதி அடையும் பட்சத்திலும் நிறுவனத்தின் கணக்குக் காத்திருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்.


Click it and Unblock the Notifications