ட்விட்டர்-ஐ மொத்தமாக வாங்க தயாரான எலான் மஸ்க்.. 54.20 டாலர் கடைசி ஆஃபர்.. $43 பில்லியன் டீல்..!

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்ற முடிவு செய்துள்ளார். எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளைக் கைப்பற்றிய பின், நிர்வாகக் குழுவில் இடம் அளித்தும் மறுத்துவிட்டார். இது ட்விட்டர் முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

எலான் மஸ்க் மறுப்புக்குப் பின் பல காரணங்கள் உள்ளது எனப் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது ட்விட்டரை மொத்தமாகக் கைப்பற்ற முடிவு செய்து டக்கரான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கு முன் வந்துள்ளார். மேலும் ஒரு பங்கை 54.20 டாலருக்கு வாங்கு தயார் என்றும் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் ட்விட்டர் பங்குச் சந்தையிலிருந்து வெளியேற்றப்பட்டுத் தனியார் நிறுவனமாக மாற்றி, பல்வேறு மறுசீரமைப்பு பணிகளைச் செய்ய முடியும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

எலான் மஸ்க் கடிதம்

எலான் மஸ்க் கடிதம்

ட்விட்டர் தலைவர் பிரட் டெய்லருக்கு அனுப்பிய கடிதத்தில் எலான் மஸ்க், " உலகளவில் சுதந்திரமான பேச்சுக்கான தளமாக ட்விட்டர் இருக்கும் என நம்பி தான், நான் முதலீடு செய்தேன், மேலும் பேச்சுச் சுதந்திரம் ஒரு சமூகத்தின் கட்டாயம் என்று தான் நம்புவதாக அந்தக் கடித்ததில் குறிப்பிட்டு இருந்தார்.

பேச்சுச் சுதந்திரம்

பேச்சுச் சுதந்திரம்

முதலில் ட்விட்டர் தனியார் நிறுவனமாக மாற்றப்பட வேண்டும், ட்விட்டர் தற்போது இருக்கும் கட்டமைப்பில் மக்களுக்குப் பேச்சுச் சுதந்திரத்தை முழுமையாக அளிக்க முடியாது. அவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்ற விருப்பம் தெரிவித்துள்ளதாக அறிவித்துள்ளார் எலான் மஸ்க்.

100 சதவீத பங்குகள்

100 சதவீத பங்குகள்

100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார். மொத்த விற்பனைத் தொகையும் பணமாக அளிக்கத் தயார் என்றும் கூறியுள்ளார் எலான் மஸ்க். தற்போது குறிப்பிட்ட விலை தான் இறுதியான விலை, இதை ஏற்காவிடில் என்னுடைய பங்குதாரர் நிலையை மாற்ற யோசிக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளார் எலான் மஸ்க்.

54.20 டாலர்

54.20 டாலர்

தற்போது தற்போது குறிப்பிடப்பட்டு உள்ள 54.20 டாலர் என்பது தான் 9.2 சதவீத பங்குகளைக் கைப்பற்றிய விலையை விடவும் 54 சதவீதம் அதிகமாகவும், மேலும் முதலீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போது இருந்த விலையைக் காட்டிலும் 38 சதவீதம் அதிகமாகும்.

இதன் மூலம் எலான் மஸ்க் ட்விட்டரை சுமார் 43 பில்லியன் டாலருக்கு கைப்பற்ற உள்ளார்.

80 மில்லியன் பாலோவர்கள்

80 மில்லியன் பாலோவர்கள்

டிவிட்டர் தளத்தில் சுமார் 80 மில்லியன் பாலோவர்களை வைத்திருக்கும் எலான் மஸ்க், தனது டிவீட்கள் மூலம் பெரிய அளவிலான மாற்றத்தைப் பல இடத்தில் கொண்டு வந்துள்ளார். எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லாத எலான் மஸ்க் டிவிட்டரில் மட்டும் ஒரு நாளுக்கு 6 முதல் 12 டிவீட் வரை செய்து ஆக்டிவ் ஆக உள்ளார்.

நிர்வாக குழு

நிர்வாக குழு

டிவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வாங்கிய பின்பு நிர்வாக குழுவில் சேராமலேயே டிவிட்டர் நிறுவனத்தில் தேவையான மாற்றங்களைக் கொண்டு வர தனது பாலோவர்களிடம் வாக்கெடுப்பு கேட்டார் எலான் மஸ்க்.

மக்களின் கருத்து

மக்களின் கருத்து

சமுக வலைத்தளங்கள் நாளுக்கு நாள் மக்களின் கருத்தை வெளிப்படையாகப் பகிர முடியாதது எலான் மஸ்க்-ஐ தொடர்ந்து நெருடி வந்தது, இதைச் சரி செய்யத் தானே களத்தில் இறங்கியுள்ளார். சுதந்திர பேச்சில் டிவிட்டரின் குறைபாடுகள் குறித்தும் பல முறை விமர்சனம் செய்த எலான் மஸ்க் 9.2 சதவீத பங்குகளை வாங்கிய பின் தற்போது 43 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் மொத்த நிறுவனத்தையும் வாங்க முடிவு செய்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+