இன்று டெக் உலகின் ஏஐ தொழில்நுட்பம் தான் மிகவும் எதிர்பார்க்கப்படும் விஷயமாகியுள்ளது, ஏஐ மூலம் மக்களின் வாழ்க்கை மிகவும் எளிதாக்கப்படும் என்பது மட்டும் அல்லாமல் நிறுவனங்களால் பெரும் செலவுகளைக் குறைக்கும் அளவுக்கு வாய்ப்புகள் உள்ளது.
இதனால் ஏஐ சார்ந்து எந்தொரு நிறுவனம் புதிய ப்ராடெக்ட்டை தயாரித்தாலும் முதலீட்டாளர்கள் கண்களை மூடிக்கொண்டு முதலீடு செய்யும் நிலைமை உருவாகியுள்ளது. இல்லையெனில் சிறிய ஏஐ நிறுவனங்களைப் பெரிய ஏஐ நிறுவனம் கட்டம் கட்டி தூக்க துவங்கியுள்ளது.

இந்த நிலையில் எலான் மஸ்க் போன்ற டெக் ஜீனியஸ் ஏஐ துறையில் இறங்கினால், சொல்லவா வேண்டும். வென்சர் பண்ட் நிறுவனங்கள் வரிசை கட்டி முதலீடு நிற்கிறது. அதுவும் எலான் சாட்ஜிபிடி, ஜெமினி போன்றவை உருவாகத் துவங்குவதற்கு முன்பில் இருந்தே ஏஐ துறையில் இயங்கி வருகிறார்.
சாட்ஜிபிடி உருவாக்கிய OpenAI நிறுவனம் துவங்கும் போது எலான் மஸ்க் தனது நிறுவனர் குழுவில் இருந்ததால், பல ஆண்டுகள் அதன் வளர்ச்சிக்கு உதவி செய்தவர், பின்னாளில் ஐடியா முரண்பாடு காரணமாக OpenAI நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் தான் OpenAI நிறுவனத்தின் சாட்ஜிபிடி அறிமுகத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் டிரெண்டான நிலையில், எலான் மஸ்க் காண்டாகி உருவாக்கிய ஒரு நிறுவனம் தான் xAI என்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனம்.
எலான் மஸ்க் உருவாக்கிய புதுமையான செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனமான xAI, ஞாயிற்றுக்கிழமை தனது வலைப்பதிவில் வெளியிட்ட அறிவிப்பின்படி, Series B நிதி திரட்டும் சுற்றில் $6 பில்லியன் டாலர்களைத் திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த முதலீட்டில் சுற்றில் டெக் உலகில் மிகவும் பிரபலமான முதலீட்டாளராக விளங்கும் Andreessen Horowitz மற்றும் Sequoia Capital உட்பட முதலீட்டாளர்கள் இந்த சுற்றில் முதலீடு செய்துள்ளனர்.
இந்த நிதி xAI நிறுவனத்தின் முதல் ப்ராடெக்ட்களை சந்தைக்குக் கொண்டு வருவதற்கும், மேம்பட்ட கட்டமைப்பை உருவாக்குவதற்கும், எதிர்கால தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டைத் துரிதப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் என்று xAI நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிதி திரட்டல் அறிவிப்புக்கு பதிலளிக்கும் வகையில், எலான் மஸ்க் தனது X பதிவில் "வரும் வாரங்களில் இது குறித்து மேலும் அறிவிப்புகள் இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
OpenAI, கூகுள் போன்ற பிரபல நிறுவனங்களுடன் போட்டிப்போடும் அளவுக்கு xAI உருவாகி வருகிறது. ஏற்கனவே X தளத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் இருக்கும் காரணத்தால் xAI நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதை மிகவும் பிரகாசமாக உள்ளது.
மேலும் ஏஐ துறையில் தற்போது OpenAI, கூகுள் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில், இந்நிறுவனத்துடன் போட்டிப்போடும் ஸ்டார்ட்அப்களுக்கு பெரிய நிதி உதவிகளை வழங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவதால், செயற்கை நுண்ணறிவு துறையில் போட்டி கடுமையாகி வருகிறது.
xAI நிறுவனம் இந்த நிதி திரட்டலுக்குப் பிறகு அதன் மதிப்பு என்ன என்பதை தெளிவாகக் கூறவில்லை என்றாலும், சந்தையின் கணிப்புகளின் படி எலான் மஸ்க்-ன் xAI நிறுவனத்தின் மதிப்பு $18 பில்லியன் முதல் $24 பில்லியன் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications